குத்துச்சண்டை பார்க்க போன இடத்தில் அர்னால்டை சந்தித்த ஷில்பா ஷெட்டி
பெய்ஜிங்: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சீனாவில் ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் மற்றும் சில்வர்ஸ்டர் ஸ்டலோனை சந்தித்து பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது தொழில் அதிபர் கணவரான ராஜ் குந்த்ராவுடன் சீனா சென்றார். சீனாவில் உள்ள மகாவ் நகரில் நடந்த குத்துச்சண்டை போட்டியை காண அவர்கள் அரங்கிற்கு சென்றனர்.
அந்த போட்டியை காண ஹாலிவுட் ஜாம்பவான்களான அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் மற்றும் சில்வர்ஸ்டர் ஸ்டலோனும் வந்திருந்தனர்.
ஷில்பா
என்ன அருமையான அனுபவம் இது. ஆமாம் எங்கள் பின்னால் இருப்பது அர்னால்ட் மற்றும் சில்வர்ஸ்டர் தான் என்று புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் ஷில்பா.
அர்னால்ட்
பாக்அல்கெய்ரி நிகழ்ச்சியில் ஒன் அன்ட் ஒன்லி அர்னால்டுடன் என்று ஷில்பா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மகாவ்
ஸ்வார்ஸ்நெக்கர், சில்வஸ்டர், ஷில்பா, ஜாக்சன் என்று பல பிரபலங்கள் குத்துச்சண்டையை பார்க்க வந்துள்ளனர் என ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.

திருமண நாள்
ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் கடந்த 22ம் தேதி தங்களின் திருமண நாளை கொண்டாடினர்.


Click it and Unblock the Notifications











