வயசாச்சா, யார் சொன்னது?: வைரலான இஞ்சி இடுப்பழகியின் பிகினி புகைப்படம்
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் பிகினி புகைப்படம் வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை பார்த்தால் 42 வயதுக்காரர் என்றே கூற முடியாது. அந்த அளவுக்கு இளமையாக உள்ளார். தினமும் யோகா, தியானம் என்று இருக்கிறார்.
நலமாக வாழ்வது குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள அவர் யோகா வீடியோக்களும் வெளியிட்டுள்ளார்.

ஷில்பா
ஷில்பா தனது மகன் மற்றும் கணவருடன் மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் மாலத்தீவுகளுக்கு போகலாம் என்று கணவர் கூற அங்கே சென்றுள்ளனர்.
வைரல்
மாலத்தீவுகளில் ஷில்பா பிகினி அணிந்து கடற்கரையில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவரை பார்த்தால் வயதானவர் என்றே கூற முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
மகன்
மாலத்தீவுகளில் மகன் வியானோடு சேர்ந்து மீன் பிடித்துள்ளார் ஷில்பா. தன் மகன் நிறைய மீன் பிடித்ததாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷில்பா.
சுவை
நடிகைகள் டயட்டில் இருக்கின்ற நேரத்தில் ஷில்பா மலாத்தீவு ரிசார்ட் ஒன்றில் உணவை செம கட்டு கட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











