ஷில்பா ஷெட்டியின் ஒட்டுமொத்த குடும்பமே கொரோனோவால் பாதிப்பு

மும்பை : இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொரோனா இரண்டாம் அலையின் நோய் பரவல் தீவிரமெடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 5000 த்தை நெருங்கி வருகிறது.

கொரோனா தொற்றால் திரையுலகை சேர்ந்த பலரும் தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபலங்கள் சிலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே படப்பிடிப்புகள் பலவும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக நடிகை ஷில்பா ஷெட்டியின் ஒட்டுமொத்த குடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

குடும்பமே பாதிப்பு

குடும்பமே பாதிப்பு

இது பற்றி ஷில்பா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஷில்பா தனது பதிவில், கடந்த 10 நாட்கள் எங்கள் குடும்பமே சிரமத்தில் உள்ளோம். எனது மாமனார்- மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களைத் தொடர்ந்து எனது ஒரு வயது குழந்தை உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

தனிமையில் இருக்கிறோம்

தனிமையில் இருக்கிறோம்

அரசு வழிகாட்டுதலின் படி, டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர்கள் அனைவரும் வீட்டில் அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். எங்கள் வீட்டில் வேலை செய்யும் இரண்டு நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் சிகிச்சையில் உள்ளனர்.

நான் நெகடிவ் ஆகிட்டேன்

நான் நெகடிவ் ஆகிட்டேன்

கடவுள் அருளால் அனைவரும் படிப்படியாக மீண்டும் வருகிறோம். எனக்கு பரிசோதனையில் நெகடிவ் என வந்து விட்டது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. உங்களின் பிரார்த்தனைகள் தொடர்ந்து எங்களுடன் இருக்கட்டும்.

பாசிடிவ்வாக இருங்கள்

பாசிடிவ்வாக இருங்கள்

கொரோனா பாசிடிவ்வோ இல்லையோ தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணியுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள். பாதுகாப்பாக இருங்கள். மன ரீதியாக அனைவரும் பாசிடிவ்வாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.

பிரபலமான ஷில்பா ஷெட்டி

பிரபலமான ஷில்பா ஷெட்டி

90 கள் மற்றும் 2000 ல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் ராஜ் குந்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷில்பா, விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களிடமும் இவர் பிரபலம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X