ஒரு பெண்ணை விட உயர்ந்த சக்தி இல்லை.. கம்பி எண்ணும் கணவர்.. போட்டோ போட்டு கெத்து காட்டும் நடிகை!

மும்பை: கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி முதல் முறையாக ஒரு போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுல் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. 40 வயதை கடந்த போதும் யோகா, டயட், எக்ஸஸைஸ் என இருந்து பல இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

இந்தியில் முன்னணி நடிகர்களுடன் எராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் விஜய்யின் குஷி படத்திலும் நடித்துள்ளார். குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார் ஷில்பா ஷெட்டி.

ராஜ் குந்தராவுடன் திருமணம்

ராஜ் குந்தராவுடன் திருமணம்

இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் ராஜ் குந்த்ரா மும்பை போலீசார் கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதமே அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போதிய ஆதாரத்திற்காக காத்திருந்தது மும்பை போலீஸ். இந்நிலையில் ஆதாரங்களுடன் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.

ராஜ் குந்த்ரா மீது புகார்

ராஜ் குந்த்ரா மீது புகார்

ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட ராஜ் குந்த்ரா, அதற்கான ஆடிஷனில் பங்கேற்ற சில நடிகைகளை ஆடையின்றி நிர்வாணமாக நடிக்க கூறியதாக புகார் எழுந்தது. மொத்தம் 9 நடிகைகள் ராஜ் குந்த்ரா மீது இதுபோன்ற புகார்களை அளித்தனர்.

ஆதாரங்களை கைப்பற்றிய மும்பை போலீஸ்

ஆதாரங்களை கைப்பற்றிய மும்பை போலீஸ்

இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் தொடர்பாக பேசிய வாட்ஸ் அப் உரையாடல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது அலுவலகத்திலும் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பல ஆபாச பட சிடிக்கள் கைப்பற்றப்பட்டன.

கதறி அழுத ஷில்பா ஷெட்டி

கதறி அழுத ஷில்பா ஷெட்டி

அதோடு ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டிலேயும் விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா ஷெட்டி குடும்ப மானமே போய்விட்டது என கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுததாகவும் தகவல் வெளியானது. ராஜ் குந்த்ரா கைதை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

கிளாமர் போட்டோ - பவர்ஃபுல் மெஸேஜ்

கிளாமர் போட்டோ - பவர்ஃபுல் மெஸேஜ்

இந்நிலையில் கணவர் கைதுக்கு பிறகு முதல் முறையாக நடிகை ஷில்பா ஷெட்டி சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். லோ நெக் மற்றும் லோ ஹிப் சேலையில் கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. மேலும் பவர்ஃபுல் மெஸேஜ் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

ஒரு பெண்ணை விட உயர்ந்த சக்தி இல்லை

ஒரு பெண்ணை விட உயர்ந்த சக்தி இல்லை

அதாவது ஒரு பெண்ணை விட உயர்ந்த சக்தி இல்லை என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. அவரது இந்த போட்டோவுக்கும் மெஸேஜுக்கும் அபிஷேக் பச்சன் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் டான்ஸர் சாப்டர் 4

சூப்பர் டான்ஸர் சாப்டர் 4

சூப்பர் டான்ஸர் சாப்டர் 4 ல் பங்கேற்றுள்ளார் ஷில்பா ஷெட்டி. மேலும் போட்டியில் பங்கேற்றுள்ள ஒரு போட்டியாளருக்கு கஞ்சக் பூஜையும் செய்துள்ளார் ஷில்பா ஷெட்டி. ஷில்பா ஷெட்டி சூப்பர் டான்ஸர் சாப்டர் 4 நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி பங்கேற்க வேண்டியது.

3 வாரங்கள் பங்கேற்க வில்லை

3 வாரங்கள் பங்கேற்க வில்லை

ஆனால் 19ஆம் தேதியே ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதால் அவரால் நிகழ்ச்சி பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து 3 வாரங்கள் ஷில்பா ஷெட்டி சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதனிடையே ராஜ் குந்தராவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X