குடும்ப மானமே போயிடுச்சு.. கணவரிடம் கடுமையாக சண்டையிட்ட ஷில்பா ஷெட்டி.. பரபரப்பு தகவல்!

சென்னை: ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் ஷில்பா ஷெட்டி கோபமாக வாக்குவாதம் செய்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

ராஜ்குந்த்ராவுக்கு எதிரான ஆதராங்களை சேகரித்துள்ள போலீசார் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கணவருடன் சண்டை

கணவருடன் சண்டை

இந்நிலையில் ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீஸார், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஷில்பா ஷெட்டி தனது கணவரிடம் கத்தி சண்டை போட்டுள்ளார். அவரை போலீஸ் குழு சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன அவசியம் இருக்கிறது?

என்ன அவசியம் இருக்கிறது?

ராஜ் குந்த்ராவை வீட்டில் பார்த்ததும் ஷில்பா ஷெட்டி நொறுங்கி போய்விட்டாராம். "நம்மிடம் எல்லாம் இருக்கிறது, இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன" என்று சொல்லிக்கொண்டே அவர் கத்தியுள்ளார்.

கண்ணீர் விட்டு அழுதார்

கண்ணீர் விட்டு அழுதார்

வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது ஷில்பா ஷெட்டியையும் போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையின் போதே கண்ணீர் விட்டு அழுதாராம் ஷில்பா ஷெட்டி.

கத்தி கூச்சலிட்ட ஷில்பா

கத்தி கூச்சலிட்ட ஷில்பா

விசாரணைக்கு பிறகும் ஷில்பா ஷெட்டி மிகவும் வருத்தப்பட்டு கவலையுடனே இருந்துள்ளார். அவரும் ராஜ் குந்த்ராவும் ஒரு பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஷில்பா ஷெட்டி பயங்கரமாக கத்தி கூச்சலிட்டுள்ளார்.

ஏன் செய்ய வேண்டும்?

ஏன் செய்ய வேண்டும்?

ஆபாச படம் எடுத்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன, ஏன் இந்த மாதிரி வேலையை செய்ய வேண்டும் என ராஜ் குந்த்ராவிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியதால் குற்றப்பிரிவு போலீசார் தலையிட்டு ஷில்பா ஷெட்டியை சமாதானப்படுத்தியுள்ளார்.

மானமே போய்விட்டது

மானமே போய்விட்டது

தனது கணவரை பார்த்ததும் கதறிய ஷில்பா ஷெட்டி, குடும்ப மானமே போய்விட்டது என்றும் தொழில் சம்மந்தமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரே பல புராஜெக்ட்டுகளை விட்டுவிட்டதாகவும், இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குந்த்ரா ஒத்துழைக்கவில்லை

குந்த்ரா ஒத்துழைக்கவில்லை

ராஜ் குந்த்ராவின் ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி இதுவரை இரண்டு முறை போலீசாரால் விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் தொடர்பு இருப்பது போல் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ் குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X