49 வயதிலும் செம ஃபிட்.. ஓடிடி படங்கள் வரமா சாபமா.. பிரபல நடிகை சொன்ன சீக்ரெட்!
சென்னை: இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடனம் ஆடிய பாடல்கள் எவர்கிரீன் ஹிட் லிஸ்டில் உள்ளன. அதைத்தொடர்ந்து குஷி படத்தில் கேமியோ ரோலில் வந்து விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவர் கடைசியாக சுகி என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கேடி தி டெவில் படத்தில் நடித்து முடித்துள்ள ஷில்பா ஷெட்டி ரசிகர்கள் மாறிவிட்டதாக தெரிவித்திருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்த பின்பு சின்னத்திரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஒர்க் அவுட் செய்யும் சில ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பார். 49 வயதாகும் ஷில்பா ஷெட்டி அப்படியே ஃபிட் ஆக இருக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்கின்றனர்.

ஆபாச வீடியோ விவகாரம்: ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கொரோனா காலத்தில் துணை நடிகைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மொபைல் செயலியில் வெளியிட்டதாகக் கூறி கைதான சம்பவம் இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கிரிப்டோ கரன்சி மூலம் சொத்துக்குவிப்பு வழக்கு என தொடர் சர்ச்சைகளில் சிக்கினார் ராஜ் குந்த்ரா. பின்னர் அவர்கள் இருக்கும் வீட்டைகாலி செய்யமாறு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது என பூதாகரமான சம்பவங்கள் நடந்தேறின.
போலீஸ் போர்ஸ்: பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஷில்பா ஷெட்டி கடந்தாண்டு போலீஸ் போர்ஸ் என்ற வெப் தொடரில் நடிக்க தொடங்கினார். அமேசான் பிரைமில் வெளியான இத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கதைகளை கேட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஷில்பா தற்போது கேடி தி டெவில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அப்போது அவர் அளித்த பேட்டி திரை பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அவர் சொன்ன பதில் உண்மைதான் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடினமான காலகட்டம்: ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டியில், தற்போது சினிமா உலகிற்கு கடினமான காலம் என்றே கூறலாம். தற்போது திரை ரசிகர்களை காட்டிலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பது சிரமமாக உள்ளது. ரசிகர்கள் மாறிவிட்டார்கள், அவர்களது சிந்தனையும் வித்தியாசமாக இருக்கிறது. நல்ல கதைகளை தேடி பார்க்க தொடங்கிவிட்டனர். இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓடிடி சினிமா: கொரோனாவுக்கு பின்பு ஓடிடியில் சினிமாவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சினிமாவை பார்க்க பல ஓடிடி தளங்கள் பிரிந்து கிடப்பதால் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால், நடிகர்கள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். பல ஓடிடிக்கள் இருப்பதால் அது ஒரு வகையில் சாபமும், வரமுமாக இருக்கிறது. இரண்டு முனை கத்தி போன்று தான் இருக்கிறது. நான் படங்களில் நடிப்பதை காட்டிலும் ஓடிடியில் என் படத்தை பார்த்து ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஓடிடியில் படம் பார்ப்பவர்களை குறை கூற முடியாது.
படங்கள் தோல்வி: நான் நடித்த படங்கள் தோற்றாலும், அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரியளவில் ஹிட் அடைந்துள்ளன. பாடல்களால் தான் சினிமாவில் இத்தனை காலம் தாக்குபிடித்துள்ளேன். நான் நன்றாக நடித்திருந்தாலும் அப்படம் பெரிதாக கவனம் பெற்றதில்லை. பாடல்கள்தான் எனக்கு அதிக வாய்ப் ஏற்படுத்தி தந்துள்ளதாக ஷில்பா ஷெட்டி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











