ஆபாச வழக்கில் இருந்து விடுதலையான ஷில்பா ஷெட்டி.. பாதிக்கப்பட்டவரே அவர் தான் என நீதிபதி கருத்து!

மும்பை: அமெரிக்க நடிகருடன் பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொண்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெரி மற்றும் ஷில்பா ஷெட்டி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது முத்தம் கொடுத்தது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இருவர் மீதும் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் 3 வழக்குகள் பதிவாகின.

ஆபாசமாக நடந்து கொண்டதாக

ஆபாசமாக நடந்து கொண்டதாக

கடந்த 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெரி மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டனர். அப்போது இருவரும் பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொண்டதற்கு எதிராக பொதுவெளியில் ஆபாசமாக நடந்து கொண்டனர் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

2007ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நிம்மதி கிடைத்து இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கெத்தகி சாவன் வழக்கில் நடிகையின் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்

பாதிக்கப்பட்டவர்

மேலும், இந்த விவாகரத்தில் வழக்கு தொடரப்பட்டு இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரே அவர் தான் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த தீர்ப்பு குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி எந்தவொரு கருத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடவில்லை.

ஆபாச வழக்கில் கைது

ஆபாச வழக்கில் கைது

கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி ஆபாச படங்களை தயாரித்து விற்ற வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செப்டம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார். இந்நிலையில், தற்போது ஷில்பா ஷெட்டியின் பல வருட வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X