ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை.. பாலிவுட்டில் குவா குவா சத்தம்.. என்ன பெயர் தெரியுமா?

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி பிறந்த குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தற்போது பகிர்ந்துள்ள நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

ஷாருக்கானின் பாஸிகர் படத்தில் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, கடந்த 2009ம் ஆண்டும் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே, வியான் எனும் 7வயது மகன் உள்ள நிலையில், தற்போது, இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

விஜய்யுடன்

விஜய்யுடன்

1993ம் ஆண்டு வெளியான பாஸிகர் படத்தில் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, 1996ல் தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், எஸ்.ஜே., சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி சுப்பர் ஹிட்டான குஷி படத்தில் விஜய்யுடன் மேக்கரினோ பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

ஃபிட்னஸ் ஃப்ரீக்

ஃபிட்னஸ் ஃப்ரீக்

44வயதாகும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, ஃபிட்னஸ் ஃப்ரீக் கொண்டவர். எப்போதுமே ஜிம், உடற்பயிற்சி என்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி வரும் ஷில்பா ஷெட்டி, தனது ஒர்க்கவுட் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டும், ஒர்க்கவுட் குறித்த வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார்.

பெண் குழந்தை

2009ம் ஆண்டு ராஜ் குந்த்ரா எனும் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2012ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வியான் குந்த்ரா என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

என்ன பெயர்?

என்ன பெயர்?

ஷில்பா ஷெட்டி தனது பெண் குழந்தைக்கு ஷமிஷா ஷெட்டி என்ற அழகான பெயரை வைத்துள்ளார். ஷா என்பது சமஸ்கிருதத்தில், எல்லாம் இருப்பவள் என்று பொருள் தருமாம், மிஷா என்பது, ரஷ்ய மொழியில் கடவுளுக்கு நிகரானவள் என்ற பொருளாம். இரண்டையும் இணைத்து இப்படியொரு பெயரை ஷில்பா தனது மகளுக்கு சூட்டியுள்ளார்.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

ஷில்பா ஷெட்டியின் கை விரலை குழந்தை ஷமிஷா பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை இன்று வெளியிட்டு, தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற அறிவிப்பை ஷில்பா அறிவித்ததில் இருந்தே, பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X