பிக் பாஸ் முடிந்தும் ஏன் அந்த நடிகையை திட்டுகிறீர்கள்?: அண்ணியார்
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முடிந்துவிட்டதே இன்னும் ஹினா கானை திட்டாதீர்கள் என்று அண்ணியார் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி சீரியலில் அண்ணியாராக நடித்து பிரபலமானவர் ஷில்பா ஷிண்டே. சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் 11 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஷில்பாவுக்கும், நடிகை ஹினா கானுக்கும் இடையே சண்டையாக இருந்தது.

ஷில்பா
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஷில்பா சமைத்த உணவு பிடிக்கவில்லை என்று ஹின கான் கூறியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இனி தன் வாழ்நாளில் ஹினா கானை பார்க்கவே விரும்பவில்லை என்று ஷில்பா தெரிவித்தார்.

ஹினா
ஷில்பா ரசிகர்களுக்கு ஹினாவை பிடிக்காது, ஹினா ரசிகர்களுக்கு ஷில்பாவை பிடிக்காது. அண்மையில் ஷில்பா ஆபாச வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட ஹினா கானின் ரசிகர்கள் அவரை விளாசினார்கள்.

கிண்டல்
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் ஷில்பாவின் ரசிகர்கள் ஹினாவை ட்விட்டரில் கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை பார்ர்த்து கடுப்பான ஹினா ட்விட்டரை விட்டே வெளியேறிவிடுவேன் என்றெல்லாம் கூறினார்.

விட்டுவிடுங்கள்
எனக்கு ஹினாவை பிடிக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. அதனால் இன்னும் சண்டை போடுவது சரி அல்ல. அவரை கிண்டல் செய்வதை நிறுத்துமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று ஷில்பா தெரிவித்துள்ளார்.

திட்டு
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனும் துவங்கப் போகிறது. ஆனால் முதல் சீசனில் கலந்து கொண்ட இரண்டு பேரை நெட்டிசன்கள் இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











