நண்பரே என்னை பலாத்காரம் செய்ய ஆள் ஏற்பாடு செய்தார்: சாக்ஷியின் தங்கை புகார்

By Siva

மும்பை: நண்பரே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய ஆளை ஏற்பாடு செய்ததாக நடிகை ஷில்பா ஷிவானந்த் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளவர் ஷில்பா ஷிவானந்த். அவர் தில் மில் கயே தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தான் மிகவும் பிரபலமானார். பின்னர் அவர் தனது பெயரை ஒஹானா ஷிவானந்த் என்று மாற்றிக் கொண்டார்.

சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்துள்ள ஷில்பா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அதிர்ச்சிகரமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

ஷில்பா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மாமியார்

மாமியார்

உங்களின் நெருங்கிய நண்பரே உங்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஆளை ஏற்பாடு செய்தால் எப்படி இருக்கும்..உங்களின் சொந்த சகோதரியே உங்களை வீட்டை விட்டு விரட்ட நினைத்தால்...சகோதரியின் மாமியார் சொத்துக்காக உங்களையும், உங்களின் அம்மாவையும் கொலை செய்ய நினைத்தால்...

அம்மா

அம்மா

சில மாதங்களுக்கு முன்பு என் சகோதரியின் மாமியார் பாவனா மீது என் அம்மா கொலை வழக்கு தொடர்ந்தார். பாவனா தனது கணவரை கொலை செய்ததுடன் என்னையும், என் அம்மாவையும் கொலை செய்ய முயன்றார்...ஷோபா இந்தியாவில் இருந்தபோது அவரை கொலை செயதார்... மறுநாளே அவர் அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார்... இந்திய போலீசாரை தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது தானே...கொலை வழக்கிற்காக நீங்கள் தேடப்படுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார் ஷில்பா.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஷில்பா தனது அக்காவின் மாமியார் பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட போஸ்டுகளை நீக்கிவிட்டார். வேதம், புதையல், மாப்பிள்ளை கவுண்டர், வாஞ்சிநாதன், மானஸ்தன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த சாக்ஷி சாகரின் தங்கை தான் இந்த ஷில்பா என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியா

மீடியா

ஷில்பா பரபரப்பான போஸ்ட் போட்டுவிட்டு நீக்கியது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இது குடும்ப விஷயம். மீடியாவுக்கு முன்பு பிரச்சனையை பெரிதாக்கவோ, யார் மனதையும் கஷ்டப்படுத்தவோ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X