ஷில்பா: வழக்கு ஒத்திவைப்பு
மாலை நாளிதழில் வெளியாகியிருந்த கவர்ச்சி புகைப்படம் தொடர்பாக நடிகைஷில்பா ஷெட்டி மீது தொடரப்பட்டிருந்த வழக்கின் விசாரணை நவம்பர் 10ம் தேதிக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் மாலை நாளிதழ் ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை ஷில்பாஷெட்டி, ரீமா சென் ஆகியோரது முழு நீள கவர்ச்சிப் படம் பிரசுரமாகியிருந்தது.
இந்த புகைப்படங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் இப்படி போஸ் கொடுத்தஇரு நடிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தட்சிணாமூர்த்திஎன்ற வழக்கறிஞர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி 2 நடிகைகள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
ஆனால் 3 பேருமே ஆஜராகவில்லை. இதையடுத்து 3 பேருக்கும் பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஷெட்டி சார்பில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஷில்பா ஷெட்டி கொடுத்த போஸ்ஆபாசமானது அல்ல.
இதற்காக அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது நியாயமல்ல. எனவே கைதுவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.
இதை ஏற்க மறுத்து நீதிபதி வழக்கை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.அன்றைய தினம் 3 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications