லாரியில் அதிவேகமாக மோதிய கார்.. விபத்தில் சிக்கிய நடிகர்.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி!
சென்னை: குட் பேட் அக்லி திரைப்பட நடிகர் டாம் சாக்கோவின் கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விபத்தில் சிக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த விபத்தில் அவருடைய தந்தை சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டாம் சாக்கோ, கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனியார் விடுதி ஒன்றில் சோதனையில் ஈடுபட்ட போது விடுதியில் நடிகர் சாக்கோ இருந்ததாக கூறப்பட்ட நிலையில், விடுதியில் இருந்து அவர் தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்த ஆதாரத்தை வைத்து போதை பொருள் தடுப்பு போலீசார் சாக்கோவிடம் 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதில், சாக்கோவிற்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதும், அவர் போதை பொருளை பயன்படுத்து தெரியவந்தது. இதையடுத்து நடிகர் டாம் சாக்கோ குடும்பத்தின் ஒப்புதலுடன், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சில மாதங்கள் தங்கி அவர் சிகிச்சை பெறுவார் என்று சொல்லப்பட்டது.

தந்தை மரணம்: இந்நிலையில், இன்று ஷைன் டாம் சாக்கோ, தனது குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு தனது தந்தையை சிகிச்சைக்காக அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, அதிவேகமாக சென்ற டாம் சாக்கோவின் கார் மோதியதில், காரின் முன்பக்கம் முழுக்க சேதமானது. இதில், டாம் சாக்கோவின் தந்தை சி.ஓ. சாக்கோக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் டாம் சாக்கோ, அவரது தாய் மரியா மற்றும் சகோதரர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அறிக்கப்பட்டு வருகிறது. இதில், டாம் சாக்கோவின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ஷைன் டாம் சாக்கோ அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி, டாக்கு மகாராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











