விஜய் பட வில்லனுக்கு வந்த அரிய வகை நோய்.. கல்யாணமும் நின்னுடுச்சு.. பாவம் எத்தனை சோதனை
திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஷைன் டாம் சக்கோ. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் அவர் தலை காட்டியிருக்கிறார். பீஸ்ட் படம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததை அடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இந்தச் சூழலில் தனக்கு அரிய வகை நோய் ஒன்று வந்திருப்பதாக சக்கோ தெரிவித்திருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஷைன் டாம் சக்கோ தனது திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குநராக தொடங்கியவர். கமல் என்ற இயக்குநரிடம் உதவி இயக்குநராக கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் இருந்த அவர் 2002ஆம் ஆண்டு வெளியான நம்மல் என்ற படத்தில் பேருந்தில் பயணப்படுபவராக ஸ்க்ரீனில் தலை காட்டினார். அந்தப் படத்தை இயக்கியதும் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக வாய்ப்பு: அதனையடுத்து தொடர்ந்து உதவி இயக்குநராக இருந்த சக்கோவுக்கு 2011ஆம் ஆண்டு வெளியான கட்டம்மா என்ற படம் ஒரு நடிகராக அடையாளம் போட்டு காண்பித்தது. அதனையடுத்து சால்ட் அண்ட் பெப்பர், ஈ அடுத்த காலத்து, சேப்டர்ஸ் என்று தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். இந்தப் படங்களில் அவரது நடிப்பு திறமை கேரள திரையுலகத்தால் கவனிக்கப்பட்டதை அடுத்து முழு நேர நடிகராக ஷைனானார் ஷைன்.
தமிழில் ஷைன்: தொடர்ந்து மலையாளத்தில் ஷைன் நடித்து பிரபலமான நடிகராக வலம் வர ஆரம்பித்தார். அவரை நெல்சன் திலீப்குமார் தமிழில் பீஸ்ட் படத்துக்காக அழைத்து வந்தார். அந்தப் படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்படாவிட்டாலும்; பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டுக்கு பிறகு அந்தப் படத்தை பற்றியும், படத்தின் க்ளைமேக்ஸில் விஜய் வில்லனை தூக்கிவருவது பற்றியும் பேசியிருந்த விஷயம் பெரும் ட்ரெண்டிங்கானது. பீஸ்ட் படத்துக்கு பிறகு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சக்கோ ஏற்றிருந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
தொடர் சோதனை: மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்திருக்கிறார் சக்கோ. நானி நடித்த தசரா படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர் அடுத்ததாக தேவரா படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படி பல மொழிகளில் நடித்துவரும் சக்கோவுக்கு சமீப காலமாக சோதனை காலமாகவே இருக்கிறது.
ஃபகத் பாசிலுக்கு வந்த நோய்: அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நின்றுபோனது. அதுகுறித்து அவரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனக்கு ஏடிஹெச்டி (கவனக்குறைவு அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற நோய்) வந்திருப்பதாக கூறியுள்ளார். அதுகுறித்து அவர், ’வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு பாதிப்பாக தெரியும். ஆனால் உண்மையில் இது எனக்கு பயனுள்ள விஷயம்.கறை நல்லது என்று சொல்வார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ரொம்பவே முயற்சிப்பார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார். இதே நோய் ஃபகத் பாசிலுக்கும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











