Shine Tom Chacko: அதிர்ச்சி.. குட் பேட் அக்லி பட நடிகர் சென்ற கார் விபத்து.. தந்தை உயிரிழப்பு
பெங்களூர்: விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி என தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்துக் காரணமாக ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் குடும்பத்துடன் பெங்களூருக்கு பயணம் செய்துக் கொண்டிருந்த நிலையில், ஏற்பட்ட விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்க்கோவின் தந்தை சி.பி. சாக்கோ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளது.

இன்று அதிகாலை 7 மணியளவில் தர்மபுரி அருகே நிகழ்ந்த விபத்தில் கார் ஒட்டுமொத்தமாக சேதம் அடைந்துள்ளது. மேலும், காரில் பயணம் செய்த டிரைவர், நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது அம்மா என அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷைன் டாம் சாக்கோ தந்தை மரணம்: வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை, பெங்களூருவுக்கு குடும்பத்துடன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, லாரி ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில், ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் கோர விபத்தில் சிக்கியது. இதில், நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்பட அவரது குடும்பத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பேரதிர்ச்சியாக இந்த விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அவருக்கு வ்யது 70.

லாரி மீது மோதிய கார்: தருமபுரியில் இருந்து பெங்களூருவை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த ஷைன் டாம் சாக்கோ உள்பட 5 பேரும் விபத்தில் சிக்கினர். முன்னதாக சென்றுக் கொண்டிருந்த லாரி மீது வேகமாக கட்டுப்பாட்டை இழந்து கார் மோதியதில் தான் விபத்து ஏற்பட்டதாக ஐவிட்னஸ் முதல் கட்டமாக தகவல் தெரிவித்துள்ளதாக பிலிமிபீட் மலையாளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீஸ்ட், குட் பேட் அக்லி: மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ வில்லனாகவும் ஹீரோவாகவும் அங்கே நடித்து வருகிறார். தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், இந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில், ஷைன் டாம் சாகோவுடன் இணைந்து நடித்து வந்த வின்சி என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் போதைப்பொருள் உட்கொண்டு தன்னிடம் தவறான முறையில் பேசியதாக அளித்த புகார் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கும் அவரது அம்மாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











