தெரிஞ்சேதான் போட்டீங்களா? கணவர் கைதுக்கு முன்பாக ஷில்பா ஷெட்டி ஷேர் செய்த கடைசி இன்ஸ்டா போஸ்ட்!

சென்னை: ஆபாச பட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி கடைசியாக ஷேர் செய்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழில் அதிபரான இவர் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதமே இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார், போதுமான ஆதாரங்களை சேகரித்து கடந்த திங்கள் கிழமை இரவு ராஜ் குந்த்ராவை கைது செய்தனர்.

ஆபாச பட வீடியோக்கள்

ஆபாச பட வீடியோக்கள்

இந்த ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராதான் முக்கிய குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள போலீசார் அவரது அலுவலகத்தில் இருந்து ஆபாச பட வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரது வாட்ஸ் அப் சேட்டுகள் மூலம் அவர்தான் மூளையாக செயல்பட்டார் என்பதை உறுதி செய்துள்ளனர்.

லண்டனில் அப்லோட்

லண்டனில் அப்லோட்

மேலும் தனது ஹாட்ஷாட் ஆப்பை லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ராஜ்குந்த்ரா விற்பனை செய்ததும், அங்கிருந்து ஆபாச படங்களை அப்லோட் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனது கணவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த பதிவு வைரலாகி வருகிறது.

மாற்றும் சக்தி இருக்காது

மாற்றும் சக்தி இருக்காது

அதாவது யோகா போஸில் போட்டோவை ஷேர் செய்துள்ள ஷில்பா ஷெட்டி, 'நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மாற்றுவதற்கான சக்தி நமக்கு எப்போதும் இருக்காது. ஆனால் அதற்குள் என்ன நடக்கிறது என்பதை நிச்சயமாகக் கட்டுப்படுத்தலாம். அது யோகா மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

மனதை அமைதிப்படுத்தவும்

மனதை அமைதிப்படுத்தவும்

மனதை அமைதிப்படுத்தவும், தேவையற்ற எண்ணங்களை குறைக்கவும், உங்கள் அலைந்து திரியும் கவனத்தை மையப்படுத்தவும், டிராடக் தியானத்தின் மூலம் உங்கள் கவனத்தை மேம்படுத்தும் திறனை உங்களுக்கு கொடுங்கள்... இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தெரிஞ்சுதான் போட்டீங்களா?

தெரிஞ்சுதான் போட்டீங்களா?

நடிகை ஷில்பா ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நடக்க போவதை முன்னரே அறிந்துதான் இந்த பதிவை ஷேர் செய்தீர்களா? அல்லாது கோ இன்சிடன்ஷியலா என கேட்டு வருகின்றனர். ஷில்பா ஷெட்டியின் இந்த பதிவு அதன்பின் நடந்து வரும் அவரது குடும்ப விவகாரங்களுக்கு பொருத்தமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X