ரசிகர்கள் அன்பால் ஆனந்தக் கண்ணீர் விட்ட சிவராஜ்குமார்.. ஜெயிலர் படத்தில் பண்ண சம்பவம் என்ன சும்மாவா!

சென்னை: ஜெயிலர் படத்தில் மோகன்லாலை விட சிவராஜ்குமாரின் ஸ்க்ரீன் பிரசென்ஸ் தான் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளதாக தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஜெயிலர் படம் பார்த்து விட்டு சிவராஜ்குமார் ரசிகர்களின் அன்பால் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தீயாய் பரவி வருகிறது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 3 நாட்களில் 185 கோடி முதல் 200 கோடி வசூலை எட்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் ஜெயிலர் ஹவுஸ்ஃபுல் என சன் பிக்சர்ஸ் நிறுவனமும் சந்தோஷத்தில் ட்வீட் போட்டுள்ளது.

Shiva Rajkumar gets emotional and cried after wathcing Jailer movie at Mysore

ஆனால், வழக்கம் போல இந்த படத்திற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் கேட்டதும்: ஜெயிலர் படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோல் தான் என சூப்பர்ஸ்டார் சொன்னதும் ஒரு செகண்ட் சீன்னா கூட வந்து நடிக்கிறேன் என ஓகே சொல்லி உள்ளனர் கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால்.

இருவரும் தங்கள் ஊரில் எவ்வளவு பெரிய தலைக்கட்டு என்பதை புரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கான சீன்களில் முழு கவனத்தையும் செலுத்தி ஆக்‌ஷன் பிளஸ் மாஸில் நெல்சன் தெறிக்கவிட்டது தான் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணமே என்கின்றனர்.

Shiva Rajkumar gets emotional and cried after wathcing Jailer movie at Mysore

ஆயுதமே தேவையில்லை: வெறும் டிஷ்யு பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு சிவராஜ்குமார் கிளைமேக்ஸ் காட்சியில் கொல மாஸ் என்ட்ரி கொடுப்பது எல்லாம் வேறு எந்த நடிகரும் கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாது என ரசிகர்கள் தியேட்டர்களில் ஜெயிலர் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டை போலவே கர்நாடகாவிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருப்பது தான் செம ஹைலைட். இந்நிலையில், ரசிகர்களுடன் நேற்று ஜெயிலர் படம் பார்த்த சிவராஜ்குமாரின் வீடியோ வெளியாகி உள்ளது.

Shiva Rajkumar gets emotional and cried after wathcing Jailer movie at Mysore

சிவாண்ணா ஆனந்தக் கண்ணீர்: மைசூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் ரசிகர்களுடன் ஜெயிலர் படத்தை நேற்று இரவு பார்த்து விட்டு திரும்பும் போது, அவர் கார் அருகே நூற்றுக் கணக்கான ரசிகர்கள் கூடி அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சிவாண்ணா என ஒரே கோஷம் போட ஆட்டோமேட்டிக்காக அவரது கண்கள் கலங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சிகள் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் வில்லனாக சிவராஜ்குமார் நடித்துள்ள நிலையில், இந்த ஆண்டு இன்னொரு பெரிய சம்பவம் காத்திருக்கு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சஞ்சய் தத் போல சிவராஜ்குமாரும் இனிமே பான் இந்தியா படங்களில் வில்லனாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X