Captain Miller - டீசருக்கு காத்திருங்கள்.. சிவராஜ்குமார் சொன்ன கேப்டன் மில்லர் அப்டேட் இதோ

சென்னை:Captain Miller Teaser(கேப்டன் மில்லர் டீசர்) கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை ஆரம்பிக்கலாம் என கணக்கு போட்டிருந்தார் தனுஷ். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி திருச்சிற்றம்பலம் கொடுத்த வெற்றியை வாத்தியில் தனுஷ் தவறவிட்டுவிட்டாரே எனவும் அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர்.

கேப்டன் மில்லர்: இதனையடுத்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ப்ரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் ஹிட்டாகும் என தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

Shiva Rajkumar Talks about Captain Miller Movie Teaser

சிக்கலை சந்தித்து முடிந்தது ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோதே சில சிக்கல்கள் ஏற்பட்டன. இருப்பினும் அதையெல்லாம் கடந்து விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து இப்படத்துக்காக வைத்திருந்த நீண்ட முடியையும், தாடியையும் திருப்பதிக்கு சென்று இறக்கினார் தனுஷ். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. பீரியட் படமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக்: இதற்கிடையே கேப்டன் மில்லர் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த சூழலில் அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் கையில் மிகப்பெரிய துப்பாக்கியுடன் தனுஷ் நிற்பது போலவும் அவருக்கு கீழே பலர் இறந்து கிடப்பது போலவும் இருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக தனுஷின் ஆட்டம் இதில் வெறித்தனமாக இருக்கும் என ரசிகரக்ள் கூறினர்.

அடுத்த அப்டேட்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துவிட்டது. இதனையடுத்து படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் தனுஷின் பிறந்தநாள் நாளை வருகிறது. அதனையொட்டி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்டேட் கொடுத்த சிவராஜ்குமார்: இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கும் சிவராஜ்குமார் பேசியிருக்கும் வீடியோ ஒன்றை படத்தை தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் பேசிய அவர், "இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. டீசருக்கு காத்திருங்கள். இன்று இரவு ரிலீஸாகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். எப்போதும் உங்கள் மீது எனக்கு அன்பு இருக்கும்" என்றார். இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர். டீசரானது இன்று இரவு 12.01 மணிக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X