பேய்களுக்கே லொள்ளுக்காட்டும் மிர்ச்சி சிவா… இடியட் டிரைலர் அவுட் !
சென்னை : மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிக்கும் இடியட் திரைப்படத்தில் டீரைலர் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தில்,மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி,மயில்சாமி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ராஜாபட்டாச்சர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெற்றிப்படம்
விஜய் டிவியின் லொள்ளுசபா நிகழ்ச்சிக்குப்பின் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராம்பாலா. இந்த படத்தின் முதல்பாகம் வெற்றி பெற்றதை தில்லுக்கு துட்டு இரண்டாவது பாகத்தை இயக்கினார் இந்த திரைப்படமும் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.

எந்த தகவலும் இல்லை
இதையடுத்து டாவு என்ற படத்தை ராம்பாலா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த திரைப்படத்தில் வடிவேலு - ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ஆனால் இத்திரைப்படம் எப்போது தொடங்கப்படும் என்ற எந்தத்தகவலும் வெளியாகவில்லை.

டிரைலர் வெளியீடு
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிர்ச்சி, சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் இடியட் என்ற படத்தை ராம்பாலா இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ராம்பாலாவின் முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது இந்த டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

விரைவில் ரிலீஸ்
அந்த டிரைலரில் நிக்கி கல்ராணி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, கையில் இரண்டு சிக்கன் துண்டுகளை வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக சிரிக்கிறார். மேலும் வழக்கமாக மிர்ச்சி சிவாவின் மொக்கையான காமெடியும், பேய்களுடன் காமெடி செய்து கலக்கியுள்ளனர். விரைவில் இத்திரைப்படம் ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











