திரைத் துளி
கொச்சி:
அன்னை தெரசா குறித்து மலையாளத்தில் தயாரிக்கப்படவுள்ள திரைப்படத்தில் நடிகர்சிவாஜி கணேசன் நடிக்கவுள்ளார்.
அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் படமாகிறது. அஸ்வதிமேனன், அன்னை தெரசாவாக நடிக்கிறார். கே.ஜே.ஜேக்கப் தயாரிக்கிறார்.
"கிப்ட் ஆப் காட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில்நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கவுள்ளார். சிவாஜி தவிர, மது, பாலச்சந்திரமேனன், நரேந்திர பிரசாத், கலாபவன் மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கல்கத்தா, பாண்டிச்சேரி, போர்ட் கொச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்புநடக்கவுள்ளது. படத்தை ஷாஜி தைக்கதன் இயக்குகிறார். படத்தின் கதையையும்அவரே எழுதுகிறார்.
அன்னை தெரசாவின் வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதே படத்தின் நோக்கம்என்று தயாரிப்பாளர் ஜேக்கப் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
Comments


Click it and Unblock the Notifications