அந்த படத்தில் நான் நல்லா நடிப்பேனா என சந்தேகப் பட்டனர்!
சென்னை: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட படைப்பில் தயாரிக்கப்பட்டு வெளியாகி இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக ஷங்கர் இணைந்த சிவாஜி திரைப்படத்தில் வில்லனாக நடித்து கலக்கியவர் நடிகர் சுமன்.
அதுவரை ஹீரோவாக நடித்து வந்த சுமன் சிவாஜி படத்தில் வில்லனாக நல்லா நடிப்பாரா என படக்குழு சந்தேகப்பட்டனர்.

வசூல் சாதனை படைத்தது
இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு பிரம்மாண்டமாக எடுத்து வருபவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் ரஜினிகாந்த் கூட்டணியில் முதல் முறையாக வெளியான சிவாஜி திரைப்படம் மாபெரும் வசூலை அள்ளியது. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருப்பார். மேலும் மணிவண்ணன்,வடிவுகரசி, சாலமன் பாப்பையா, விவேக் என பலர் நடித்திருப்பார்கள். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

இலவச மருத்துவ வசதி
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் புது விதமாக மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவும் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வார். வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த ரஜினிகாந்த் தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஏழைகளுக்கு நல்ல இலவச மருத்துவ வசதியை தர வேண்டும் என புதிதாக மருத்துவமனை ஒன்றை கட்ட நினைக்கிறார். ஆனால் அதை நடத்தவிடாமல் மருத்துவ மாபியா கும்பல் அவரை தடுக்கிறது. அவரிடம் இருக்கும் மொத்த சொத்துக்களையும் அபகரித்துக் கொள்கிறது.

முதல் முறையாக வில்லனாக
சிவாஜி படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார் நடிகர் சுமன். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சுமன் முதல் முறையாக வில்லனாக நடித்த திரைப்படம் சிவாஜி. இதில் ஆதிசேஷன் என்ற கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக பொருந்தி இருப்பார். சிவாஜி படத்தில் சுமனுக்கு நல்ல பெயரும் கிடைத்தது. இந்த நிலையில் ஆதிசேஷன் கதாபாத்திரத்திற்கு பின்னாலுள்ள சுவாரஸ்ய நிகழ்வுகள் பற்றி சுமன் பகிர்ந்துள்ளார்.

ஆதிசேஷன்
திடீரென ஒருநாள் இயக்குனர் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க என்னை கேட்டார்கள் நானும் உடனடியாக சம்மதித்தேன். கதை கேட்கின்றீர்களா என்றார்கள் இல்லை தேவை இல்லை என்றேன்.. பரவாயில்லை கேளுங்கள் என்றார்கள் கேட்டேன்.. கதை நன்றாக உள்ளது எந்த குறையும் இல்லை என கூறினேன். அப்பொழுது ஷங்கர் வெளிநாட்டில் இருந்தார். இந்தியா வந்தவுடன் ஷங்கர் நேரில் வர சொன்னார். ஆதிசேஷன் கதாபாத்திரத்தையும் அதன் லுக் பற்றியும் விவரித்தார். இந்த படத்திற்காக மீசையை எடுக்க வேண்டியதிருக்கும் என்றார் நானும் சம்மதித்தேன்.

நல்லா நடிப்பேனா
முதலில் பேண்ட் சர்ட்டில் போட்டோ ஷூட் நடத்தினோம் அது செட்டாகவில்லை பின் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை மற்றும் தங்கப் பல் வைத்து எடுக்கப்பட்ட கெட்டப் மிகப் பொருத்தமாக இருந்தது. ஆனால் நான் இதுவரை கதாநாயகனாக நடித்து விட்டு முதல்முறையாக வில்லனாக நடிப்பதால் நான் நல்லா நடிப்பேனா என அனைவரும் சந்தேகப் பட்டனர். பின் படம் வெளியான போது பெண்கள் உட்பட பலரும் என்னுடைய கதாபாத்திரத்தை பாராட்டினர். என அந்த நேர்காணலில் நடிகர் சுமன் சிவாஜியில் வில்லனாக நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











