மன்னன் ரீமேக்.. சிவாஜி ரெடி.. நாயகன் யார்?.. நாயகி நயனாமே!

சென்னை: சிவாஜி புரடக்ஷன்ஸ் மன்னன் படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டு இருக்கும் நிலையில் இப்போது கொஞ்சம் காக்க காக்க பொறுமை காக்கன்னு இருக்காங்களாம்.

ரீமேக்கில் விஜயசாந்தி ரோலில் நயனையும், ரஜினி ரோலில் சிம்புவையும் சேர்க்கலாம் சாரி கேட்கலாம் என்கிற நினைப்பில் சிவாஜி புரடக்ஷன்ஸ் இருந்துச்சுன்னு சொல்றாங்க.

Shivaji productions wait for Mannan remake

அப்புறம் ஏன் அமைதி காத்துக்கிட்டுன்னு கேள்வி வருதே... காரணம் வேற ஒண்ணுமில்லை.. மிஸ்டர் லோக்கல் படம்தானாம். படம் என்னவோ காமெடி படமாக இருந்தாலும் கொஞ்சம் மன்னன் சாயலில் இருக்கும்னு பேசிக்கறதுனால இவங்க வெயிட்டிங்.

படத்தின் முதல் பார்வை வெளியாகட்டும்னு இப்போ சொல்றாங்களாம் சிவாஜி புரடக்ஷன்ஸ். ரஜினி, விஜயசாந்தி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் படம் மன்னன்.

Shivaji productions wait for Mannan remake

என்னதான் ரஜினி படமாக இருந்தாலும், ரஜினி- கவுண்டமணி காமெடி சிரிக்க வைத்தாலும் கூடுதல் பிளஸ் நடிகை விஜயசாந்திதான். லேடி சூப்பர் ஸ்டார் அவர்.

Shivaji productions wait for Mannan remake

இப்போது அவரின் இடத்தை நயனால் மட்டுமே நிரப்ப முடியும்.. தவிர நயன்தான் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார். இதை வச்சுதான் நயன்தாராவை விஜயசாந்தி ரோலில் நடிக்க வைக்க திட்டமிட்டனராம்.

Shivaji productions wait for Mannan remake

அது சரி சிம்புவை எதுக்காக...? சிம்பு இயற்கையாவே கொஞ்சம் துள்ளலான ஆள்.. அதை விட நயன்தாராவுக்கு சரியான ஜோடியும் கூட. அதனால இருக்குமோ..சரி..இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து நடிக்க சம்மதிப்பங்களா?

காக்க.. காக்க..பொறுமை காக்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X