ஷிவாங்கி காமெடி பண்ணி பாத்துருக்கீங்களா... விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணியில பாருங்க
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷிவாங்கி.
Recommended Video
தற்போது கோலிவுட் மற்றும் தனிப்பட்ட முறையில் சில பாடல்களையும் இவர் பாடி ஹிட்டாக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் ஷிவாங்கி இணைந்து கலக்கி வருகிறார்.

சூப்பர் சிங்கரில் ஷிவாங்கி
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கரில் தன்னுடைய சிறப்பான பாடல்கள் மூலம் இசைப் பிரியர்களை வெகுவாக கவர்ந்தார். இவரது கெட்டப்பிற்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இன்னிசை மழை பொழிந்தார்.

கொள்ளை கொண்ட ஷிவாங்கி
ஆயினும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமே மிகவும் பிரபலமானார். அஸ்வினுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிகளால் அரங்கம் மட்டுமின்றி ரசிகர்களின் இதயங்களும் அதிர்ந்தன. தொடர்ந்து விதவிதமான கெட்டப்புகள் மற்றும் தன்னுடைய அப்பாவித்தனமான ஆக்ஷன்கள் மூலமும் அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்துள்ளார்.

ஹிட் கொடுக்கும் ஷிவாங்கி
தற்போது கோலிவுட்டில் மட்டுமின்றி சில தனிப்பட்ட ஆல்பங்களிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார். அவை ஹிட்டடித்து வருகின்றன. அஸ்கு மாரோ பாடல் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே விஜய் டிவியின் அடுத்த ஷோவிலும் களமிறங்கியுள்ளார் ஷிவாங்கி.

காமெடியில் கலக்கும் ஷிவாங்கி
ஞாயிறுதோறும் விஜய் டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் இவர் இணைந்து கலக்கி வருகிறார். இதன் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் காவலர் வேடத்தில் இவர் காமெடி செய்கிறார். ஷிவாங்கி காமெடி செய்து பார்த்திருக்கிறாயா என்று இவர் மல்லுக்கு நிற்கிறார். புகழ் உள்ளிட்டவர்களும் இதில் அதகளம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











