'வாழ்க்கையை விட விரும்பலை..' கண்ணீர் மல்க உதவிக்கேட்ட டிவி நடிகர்.. ஓடோடி வந்து உதவிய பிரபல நடிகை!

By

மும்பை: தனக்கு உதவுமாறு கண்ணீர் மல்க உதவி கேட்ட டிவி நடிகருக்கு, பிரபல நடிகை உதவி செய்துள்ளார்.

ஆமிர்கான் நடித்த, மங்கள் பாண்டே, அக்னிபாத் 2, ஜான் டே உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருப்பவர் ராஜேஷ் காரீர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், மும்பையில் தங்கி, சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

உருக்கமான வீடியோ

உருக்கமான வீடியோ

பல டிவி தொடர்களிள் நடித்துள்ள இவர், பெகசராய் என்ற தொடரில், நடிகைகள் சிவாங்கி ஜோஷி, ஸ்வேதா திவாரி ஆகியோருடன் நடித்திருந்தார். இந்த தொடர் கவனிக்கப்பட்டது. மேலும் சில தொடர்களில் நடித்துள்ள இவர், இந்தியில் பிரபலமான முகம். இவர், தனக்கு பண உதவி செய்ய வேண்டும் என உருக்கமான வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

லாக்டவுன்

லாக்டவுன்

அந்த வீடியோவில், 'எனக்கு வேறு வழி தெரியாததால் முறையிடுகிறேன். எனக்கு பண உதவி தேவைப்படுகிறது. கடந்த 15, 16 வருடமான மும்பையில் இருக்கிறேன். எனக்கு நீண்ட நாட்களாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. தொடங்கினாலும் வாய்ப்புக் கிடைக்குமா என்பதும் தெரியாது.

சிவாங்கி ஜோஷி

சிவாங்கி ஜோஷி

இதனால் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள். உங்களால் என்ன முடியுமோ அதை கொடுத்து உதவுங்கள். நான் வாழ வேண்டும். இந்த வாழ்வை விட்டுவிட மனம் வரவில்லை' என்று கூறியிருந்த அவர், வங்கி எண்ணையும் போன் நம்பரையும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வீடியோவை கண்ட அவருடன் நடித்த நடிகை சிவாங்கி ஜோஷி, அவருக்கு பண உதவி செய்துள்ளார்.

பெரிய உதவி

பெரிய உதவி

இதுபற்றி கூறியுள்ள நடிகர் ராஜேஷ் காரீர், 'அந்த தொடரின் படப்பிடிப்பின்போது எனக்கும் அவருக்கும் அதிக பழக்கமில்லை. இருந்தும் உடனடியாக ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்தார். இது பெரிய உதவி. அவரை போல, இன்னும் பலரும் வீடியோ வெளியான ஒரு மணி நேரத்திற்குள் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கும் நன்றி.

Recommended Video

Kaka Muttai சின்ன பசங்க இப்போ Hero மாறி இருக்காங்க | Dhanush
ஸீரோவில் இருந்து

ஸீரோவில் இருந்து

கடந்த 10 வருடமாக இந்தி சினிமாவில் இருக்கிறேன். இனி, என்னை போன்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். எனக்கு மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர். லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு தொடங்கினாலும் ஸீரோவில் இருந்துதான் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். அதனால் சொந்த ஊரான ராஜஸ்தான் செல்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X