குக் வித் கோமாளி புகழ் சிவாங்கிக்கு வந்த வாழ்வா இது?: அடேங்கப்பா தேனி சமஸ்தானமே ஆடிப் போய்டுச்சாமே!

தேனி: விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சிவாங்கி.

இப்போது பாடகியாகவும், திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சிவாங்கி சென்றிருந்த போது சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

சூப்பர் சிங்கரில் அறிமுகம்

சூப்பர் சிங்கரில் அறிமுகம்

விஜய் தொலைக்காட்சியில் எதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டாலே போதும் பிரபலமாகிவிடலாம். அதுவும் சிவாங்கியோ சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என இரண்டு நிகழ்ச்சிகளில் வந்து ரசிகர்களை அசரடித்தவர். குழந்தைத்தனமாக இருந்தாலும், சூப்பர் சிங்கரில் சிவாங்கி பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரொம்பவே கொண்டாடப்பட்டது. சூப்பர் சிங்கரைத் தொடர்ந்து பல மேடை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார்.

குக் வித் கோமாளி கொடுத்த உச்சம்

குக் வித் கோமாளி கொடுத்த உச்சம்

சூப்பர் சிங்கரைத் தொடர்ந்து சிவாங்கி பங்கேற்ற 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, செம்ம ஹிட் அடித்தது. அஸ்வினுடன் காதல், புகழ் உடன் அண்ணன், தங்கை செண்டிமெண்ட் என பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் சிவாங்கி. அதிலும் "அஸ்வினே... அஸ்வினே" என சிவாங்கியின் மாடுலேஷன், பலரையும் ரசிக்க வைத்தது. வெள்ளந்தியான மனசுக்கு சொந்தக்காரரான சிவாங்கிக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருந்தனர்.

சினிமாவிலும் அடியெடுத்து வைத்த சிவாங்கி

சினிமாவிலும் அடியெடுத்து வைத்த சிவாங்கி

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு சிவாங்கியின் மார்க்கெட் உச்சம் சென்றது. சினிமாவிலும் சில பாடல்களைப் பாடிய அவர், சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். 'டான்' படத்திலும் தனது குழந்தைத்தனமான நடிப்பால், அனைவரையும் வசீகரித்தார். சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒரு குழந்தை கோவை சரளாவாக ரவுண்டு அடித்து வருகிறார்.

குலுங்கிய தேனி சமஸ்தானம்

குலுங்கிய தேனி சமஸ்தானம்

சில மாதங்களுக்கு முன்னர் நெல்லையில் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு சென்றிந்த குக் வித் கோமாளி புகழை, ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்தனர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இப்போது அதேபோன்று தேனியில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார் சிவாங்கி. கடையை திறந்து வைத்ததோடு, பாட்டுப் பாடியும் ஆட்டம் போட்டும் அதகளம் செய்துள்ளார். இதனால், சிவாங்கியை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த நகைக் கடையை சூழ, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், சிவாங்கிக்கு வந்த வாழ்வா இது என, வாய்மேல் விரல் வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X