என்ன ஷிவானி சண்டை எல்லாம் போடுறாங்க.. அதுவும் ஆரிக்கு சரிக்கு சமமா.. என்ன மேட்டருன்னு தெரியுமா?
சென்னை: கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ஆரம்பித்தது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி.
ஹவுஸ்மேட்கள் அவங்களே கேக் செஞ்சாங்கன்னு செம காமெடி பண்ண வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியை கமல் பார்க்க சொல்லிவிட்டு, ரெஸ்ட் எடுத்தார்.
ஆரிக்கும் ஷிவானிக்கும் இடையே க்ளீனிங் பண்ணுவதில் மோதல் வெடிக்கும் சூப்பரான காட்சி ரசிகர்களுக்கு ஆரம்பமே செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்
பிக் பாஸ் வீட்டில் நடிகர் ஆரி தான் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் என்பதை வெள்ளிக்கிழமை எபிசோடிலும் காட்டி உள்ளார். எல்லா நேரங்களிலும் ஃபன்னாக இருக்காமல், ஒரு வித இறுகிய மனதோடே அவர் இருக்கிறாரோ என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு இயல்பாகவே வந்து விடுகிறது. சொல்வது சரி என்றாலும், கூலாக பேசி, கலகலப்பாக வேலை வாங்கலாமே ஆரி.

ஆரிக்கு சரி நிகராக நின்ற ஷிவானி
இதுவரை பிக் பாஸ் வீட்டில் கொலு பொம்மையாகவும், செட் பிராப்பர்ட்டியாகவும், பாலாஜிக்கு ஊட்டி விட்டு லூட்டி அடிக்கும் பெண்ணாக மட்டுமே ஷிவானி இருந்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை எபிசோடின் இரவு நேரத்தில் ஆரியுடன் சரிக்கு சரியாக நின்று ஷிவானி சண்டை போடும் அழகையும் ரசிகர்கள் அசந்து பார்த்தனர்.

கேபியின் முயற்சி
இவருக்கும் இடையே வீட்டை பெருக்குவதில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய கேபி எவ்வளவோ முயற்சி செய்தார். புரோ.. புரோ என அவர் தன்மையாக பேசச் சொல்லியும் ஆரி, இந்த வீட்டில் இனி கத்தினால் தான் சிறந்த போட்டியாளர் என சொல்லுவாங்க, சைலன்ட்டா இருந்தா சாம்பார் என பச்சைக் குத்திடுவாங்க என நினைத்துக் கொண்டு தொடர்ந்து கத்த ஆரம்பித்தார்.

பாலாவுடன் சுத்தவே சரியா இருக்கு
சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உடனே, ஷிவானி நாராயணன் பாலாஜியுடன் சுத்தவே நேரம் சரியா இருக்கு என்றும் கலாய்த்து வருகின்றனர். பாலாவை ஆரி எதிர்த்ததால் தான் ஷிவானி ஆரிக்கு எதிராக சண்டை போட கிளம்பியுள்ளார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. எப்படியோ ஷிவானி பர்ஃபார்ம் பண்ண ஆரம்பித்து விட்டார், அடுத்த வாரம் தலைவியாகி விடுவார் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











