மீண்டும் ஜோடி சேரப் போகும் ஷிவானி அன்ட் பாலாஜி? றெக்கை கட்டி பறக்கும் தகவல்.. என்ன நடக்கப்போகுதோ!

சென்னை: ஷிவானியும் பாலாஜியும் இணைந்து சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன்.

இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷிவானி நாராயணன்.

பாலாஜியை பார்த்துகொள்வது

பாலாஜியை பார்த்துகொள்வது

இதன் மூலம் பெரும் பிரபலமானார். இதில் பங்கேற்ற சக போட்டியாளரான பாலாஜியுடன் நெருக்கமாக பழகினார் ஷிவானி. பாலாஜிக்கு ஊட்டி விடுவது, மசாஜ் செய்வது, அவரை எழுப்பி விடுவது என பாலாஜியை பார்த்துக் கொள்வதையே முதல் பணியாக கொண்டிருந்தார்.

இன்வால்வ்மென்ட் காட்டவில்லை

இன்வால்வ்மென்ட் காட்டவில்லை

இதனால் சக ஹவுஸ்மேட்டுகளே அவர்களை கிண்டலடித்தனர். ரம்யா பாண்டியன், ஷிவானி பாலா மாமா பாலா மாமா என்று பாலாஜியை எண்டெர்டெய்ன் செய்வதை தவிர வேறு எதிலும் இன்வால்வ்மென்ட் காட்டவில்லை என கிண்டலடித்தார்.

மானத்தை வாங்கிவிட்டார்

மானத்தை வாங்கிவிட்டார்

இப்படி ஹவுஸ்மேட்ஸ் பலரும் ஷிவானியையும் பாலாஜியையும் ஓட்டினர். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா பாலாஜியுடன் நெருங்கி பழகுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். குடும்ப மானத்தையே வாங்கி விட்டதாக திட்டி தீர்த்தார்.

லீட் ரோலில்..

லீட் ரோலில்..

அதன்பிறகு பாலாஜியிடம் இருந்து சற்று விலகியே இருந்தார் ஷிவானி. இந்நிலையில் ஷிவானியும் பாலாஜியும் சீரியல் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அந்த சீரியலில், ஷிவானியும் பாலாஜியும் லீட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அசீம் ஜோடியாக..

அசீம் ஜோடியாக..


ஆனால் பாலாஜிக்கு பட வாய்ப்புகள் வருவதால் அவர் சீரியலில் நடிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனிடையே புதிய சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட அசீம் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

அசீம் சமீபத்தில்தான் தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்தார். இதனை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்த போது ஷிவானி அசீமை ஒரு தலையாக காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X