குறி வைத்த ஹவுஸ்மேட்ஸ்.. இந்த வாரம் ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட வொர்ஸ் பர்ஃபாமர் இவங்கதான்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமராக கேபியும் ஷிவானியும் தேர்வு செய்யப்பட்டனர்.
பிக்பாஸ் வீட்டில் வாரம்தோறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக செயல்படும் இரண்டு நபர்களையும் வாரம் முழுக்க சிறப்பாக செயல் படும் ஒரு நபரையும் தேர்வு செய்து கேப்டன் டாஸ்க்கு அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வாரம் கேப்டன் டாஸ்க்கிற்கு பாலாஜி, ரம்யா, அர்ச்சனா ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

வொர்ஸ்ட் பர்ஃபாமர் நாமினேஷன்
இதேபோல் வாரம் முழுக்க சுவாரசியமும் ஈடுபாடும் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் இந்த வாரமும் இரண்டு பேரை தேர்வு செய்வதற்கான நாமினேஷன் நடைபெற்றது.

அனிதா கேபி நாமினேட்
இதில், முதல் ஆளாய் வந்த பாலா, அனிதா கேபி ஆகிய இருவரை நாமினேட் செய்தார். அடுத்து வந்த ரம்யா, ரியோ மற்றும் கேபியை நாமினேட் செய்தார். அவரை தொடர்ந்து வந்த அனிதா ரியோ மற்றும் கேபி ஆகியோரின் பெயரை நாமினேட் செய்தார்.

இதிலும் ஆரி பெயர்
பின்னர் வந்த அர்ச்சனா, ஆரி மற்றும் ஷிவானியை நாமினேட் செய்தார். தொடர்ந்து வந்த கேபி அனிதா மற்றும் ஷிவானி ஆகியோரின் பெயர்களை நாமினேட் செய்தார். இதேபோல் ஷிவானி, கேபி மற்றும் ஆரியின் பெயைரையும் ஆரி, ஷிவானி மற்றும் ஆஜித்தின் பெயரை நாமினேட் செய்தனர்.

வொர்ஸ்ட் பர்ஃபாமர்
தொடர்ந்து ஆஜித் கேபி மற்றும் ஆரியை நாமினேட் செய்தார்.
சோம் கேபி பெயரை நாமினேட் செய்தார். தொடர்ந்து வந்த
ரியோ ஆரி மற்றும் ஷிவானியை வொர்ஸ்ட் பர்ஃபாமர் என நாமினேட் செய்தார்.

ஜெயிலில் கேபி ஷிவானி
இதில் அதிக வாக்குகள் பெற்ற கேபி மற்றும் ஷிவானி ஆகியோர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். ஷிவானி ஏற்கனவே ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் கேபி முதல் முறையாக ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.


Click it and Unblock the Notifications











