ஷிவானி செல்லத்த ஜெயில்ல வச்சி பூட்டிட்டாங்களே.. பாவம் ரமேஷ்.. பரிதாபப்பட்ட பாலாஜி.. செம புரமோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 12வது நாள் முதல் புரமோவே சரவெடியாக உள்ளது.

இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் இருந்த கண்ணாடி சிறைக்கதவு திறக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் ஷிவானியையும், ஜித்தன் ரமேஷையும் அதில் அடைத்து பூட்டிய புரமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஈர்க்கும் புரமோக்கள்

ஈர்க்கும் புரமோக்கள்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை புரமோ வீடியோக்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து, நிகழ்ச்சி குறித்த ஹைப்பை எகிற வைப்பதில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிகர் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இன்றைய முதல் புரமோவும் இப்போ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

சுவாரஸ்யமும் ஈடுபாடும் இல்லாதவங்க

சுவாரஸ்யமும் ஈடுபாடும் இல்லாதவங்க

ஹவுஸ்மேட்கள் அனைவரும் ஒன்றாக கூடி சோபாவில் அமர்ந்துள்ள நிலையில், பிக் பாஸ் குரல் ஒலிக்கிறது. இந்த வீட்டில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் இல்லாத இரண்டு பேரை அந்த கண்ணாடி அறைக்குள் தள்ளிப் பூட்டுங்க என பிக் பாஸ் உத்தரவு போடுகிறார். ஹவுஸ்மேட்கள் தங்கள் கருத்துக்களை மேடையேறி கூறுகின்றனர்.

மறுபடியும் ஷிவானி தான்

மறுபடியும் ஷிவானி தான்

பிக் பாஸ் வீட்டின் அலங்கார பொருளாக உள்ளார் ஷிவானி நாராயணன் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டு அவரை அசிங்கப்படுத்திய நிலையில், இந்த புரமோவில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் ஷிவானியின் பெயரை மறுபடியும் பரிந்துரை செய்கின்றனர். ஹார்ட் பிரேக் டாஸ்க்கை போலவே பலரும் ஷிவானியை வச்சு செய்கின்றனர்.

பாவம் ரமேஷ்

பாவம் ரமேஷ்

இன்னொரு நபராக இந்த வீட்டில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் காட்டாமல் இருப்பதாக ஜித்தன் ரமேஷை மெஜாரிட்டியான போட்டியாளர்கள் கை காட்ட, அவரையும் ஷிவானியுடன் சேர்த்து அந்த கண்ணாடி ஜெயிலுக்குள் தள்ள பிக் பாஸ் போட்டியாளர்கள் முடிவு செய்கின்றனர். புரமோவை பார்த்த உடனே இன்றைய நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்கிலேயே வெறி ஏறி வருகின்றனர்.

ஜெயில்ல தள்ளி பூட்டும் மொட்டை

ஜெயில்ல தள்ளி பூட்டும் மொட்டை

என்னடா இந்த புரமோவில் நம்ம மொட்டை பாஸை காணலையேன்னு பார்த்தா, கடைசியில ஷிவானி நாராயணன் மற்றும் ஜித்தன் ரமேஷை கண்ணாடி ஜெயில்ல தள்ளி பூட்டுறதே நம்ம மொட்டை தாத்தா தான். முகத்தில் கடுகு போட்டால் வெடித்து விடும் போல ஷிவானி முறைக்கும் பக்காவான புரமோ வெளியாகி உள்ளது.

பரிதாபப்பட்ட பாலாஜி

பரிதாபப்பட்ட பாலாஜி

பாவம் இந்த பொண்ணுப்பா.. புடிச்சு எதுலயாவது கோர்த்து விட்றாங்க என ஷிவானி நாராயணனுக்காக பரிதாபப்பட்டு பாலாஜி பேசும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்று, ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மீண்டும் ஒரு நல்ல மதிப்பு வரும் அளவுக்கு இந்த புரமோ அமைந்திருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியிலும் ஆஜீத்துடன் செல்லமாக விளையாடவே அவர் அந்த எவிக்‌ஷன் பாஸை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X