சுரேஷ் ரெய்னா கூட.. பிக் பாஸ் ஷிவானி, குக் வித் கோமாளி ஷிவாங்கி என்ன பண்ணாங்கன்னு தெரியுமா?

சென்னை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூட பிக் பாஸ் ஷிவானி நாராயணன், குக் வித் கோமாளி ஷிவாங்கி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

WHY NO HOME MATCH FOR CSK ? | RAINA EXPLAIN | TNBSL 2021 LAUNCH | FILMIBEAT TAMIL

சென்னையில் நடைபெற்ற TNBSL சீசன் 2 விழாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ரானி, ஜுவாலா கட்டா, பிக் பாஸ் ஷிவானி மற்றும் குக் வித் கோமாளி ஷிவாங்கி கலந்து கொண்டனர்.

பாட்மிண்டன் போட்டி

பாட்மிண்டன் போட்டி

TNBSL எனப்படும் தமிழ்நாடு பாட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியின் இரண்டாவது சீசன் தொடர்பான விழாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார். மேலும், பாட்மிண்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் காதலியுமான ஜுவாலா கட்டா, நிக்கி கல்ராணி, ஷிவானி நாராயணன் மற்றும் ஷிவாங்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாட்டுப் பாடிய ஷிவாங்கி

பாட்டுப் பாடிய ஷிவாங்கி

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குக் வித் கோமாளி ஷிவாங்கி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பாடல் ஒன்றை பாடினார். மேலும், ஸ்போர்ட்ஸ் பக்கமே தான் போக மாட்டேன் என்றும் கலகலப்பாக பேசி அரங்கை அதிரவைத்தார். பின்னர் சுரேஷ் ரெய்னாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெய்னாவுடன் ஷிவானி

ரெய்னாவுடன் ஷிவானி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். சுரேஷ் ரெய்னாவை சந்தித்து அவருடன் பேசிவிட்டு, எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் SR ஃபயர் என கேப்ஷன் போட்டு டிரெண்ட் செய்துள்ளார்.

குவியுது லைக்ஸ்

குவியுது லைக்ஸ்

ஷிவு என்னோட ஃபேவரைட் சின்ன தல கூட மாஸ் காட்றீங்க போங்க என ஷிவானி ரசிகர்கள் கமெண்ட்டுகளாக போட்டு ஷிவானியை கொண்டாடி வருகின்றனர். சுமார் 2 லட்சத்திற்கும் மேலான லைக்குகளும் குவிந்து வருகின்றன. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோக்களை போட்டு அசத்தி வந்த ஷிவானி இப்போ ரெய்னாவுடன் போட்டோ போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X