பாலா மாமா பக்கத்தில் ஷிவானி நாராயணன்.. மீண்டும் ஒரு ரீயூனியன்.. இந்த முறை எதுக்கு தெரியுமா?
சென்னை: இளம் பெண்கள் ஆசையாக பாலா மாமா பாலா மாமா என கொஞ்சும் பாலாஜி முருகதாஸின் பக்கத்தில் ஷிவானி நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், சம்யுக்தா, கேபி மற்றும் ஆஜீத் இந்த போட்டோவில் ஒன்றாக நின்று போஸ் கொடுத்துள்ளனர்.
என்னப்பா இன்னொரு ரீயூனியனா? என ரசிகர்கள் கேட்கும் முன்னே எதுக்கு இந்த சந்திப்பு என்பதை ஆஜீத் விளக்கி உள்ளார்.

ஒரே பார்ட்டி தான்
இதற்கு முன்பாக 3 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகளவில் சந்தித்து கொள்ளாத நிலையில், இந்த சீசன் போட்டியாளர்கள், உள்ளே மட்டுமல்ல வெளியேவும் குரூப் குரூப்பாத்தான் சுத்துறாங்க. மேலும், பர்த்டே பார்ட்டி, ரீ யூனியன் என போட்டோக்களாக போட்டு தள்ளுகின்றனர்.

பாலா பக்கத்தில் ஷிவானி
பிக் பாஸ் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களின் ரீ யூனியன் போட்டோக்களில் எல்லாம் பாலாவின் பக்கத்தில் ஷிவானி ஏன் நிற்பதில்லை என ரசிகர்கள் மனக்கஷ்டம் அடைந்த நிலையில், தற்போது பாலாவின் பக்கத்தில் ஷிவானி நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மீண்டும் குரூப்பாக
அந்த போட்டோவில் பாலா மற்றும் ஷிவானி மட்டுமின்றி ஆஜீத், கேபி மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஷிவானியின் செல்ல நாய்க்குட்டிக்கு சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாட ஒன்று கூடியவர்கள் மீண்டும் ஏன் கூடியுள்ளனர் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுவதற்கு முன்பாகவே ஆஜீத் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

புதிய ஸ்டூடியோ
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் குழந்தை பாடகராக அறிமுகமாகி மக்களின் மனங்களை வென்ற ஆஜீத், பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு, வெளியேறிய நிலையில், தனது புதிய ஸ்டூடியோவான ஏகே சவுண்ட் வொர்க்ஸை சென்னையில் உள்ள சூளைமேட்டில் திறந்துள்ளார். அந்த திறப்பு விழாவிற்குத் தான் ஆஜீத்தின் நண்பர்களான பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரியோவும் கலந்து கொண்டு ஆஜீத்தை வாழ்த்தினார்.

சுரேஷ் தாத்தா மிஸ்சிங்
மேலும், சுரேஷ் தாத்தாவும் தனது புதிய ஸ்டூடியோவின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் என்றும், இந்த புகைப்படத்தில் அவர் மட்டும் மிஸ்சிங் என வருத்தத்துடன் ஆஜீத் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது. புதிய தொடக்கம் வெற்றி பெற ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்களும் சூப்பர் சிங்கர் ரசிகர்களும் ஆஜீத்தை வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











