ஷிவானிக்கு உள்ளேயும் ஒரு ‘மம்மி’ கிடைச்சிட்டாங்க.. அக்கான்னு சொன்னாக்கூட பரவாயில்ல.. பாவம் அவங்க!

சென்னை: பிக் பாஸ் வீட்டின் செல்லக்கிளியாக இருக்கும் ஷிவானிக்கு உள்ளேயும் ஒரு ஸ்மார்ட்டான மம்மி கிடைச்சிட்டாங்க.

வெளியே இருக்குற நிஜ மம்மி அவங்க இன்ஸ்டாகிராமில் தினமும் போட்டோவா போட்டு ரசிகர்கள் ஆர்மியை வலுப்படுத்துறாங்கன்னு பார்த்தா, இப்போ உள்ளேயும் ஒருத்தங்க கிடைச்சிட்டாங்களா.. கொடுப்பனை தான் என பிக் பாஸ் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

அடுத்த சண்டை உனக்கும் உன் மம்மிக்கும் தான் என இந்நேரம் பிக் பாஸ் நோட் பண்ணியிருப்பாரு என்றும் கலாய்த்து வருகின்றனர்.

அனிதாவுக்கு ஆப்பு

அனிதாவுக்கு ஆப்பு

பழிக்கு பழி வாங்குறா ஷிவானி என சொல்லி அனிதா சம்பத், ஷிவானிக்கு அந்த அரக்க கொம்புகளை வைத்த நிலையில், ஷிவானி டர்ன் வந்தவுடன், அவர் சொன்னது போலவே அனிதாவுக்கே அந்த அரக்க கொம்புகளை பரிசாக கொடுத்து ஆப்பு வைத்து விட்டார். ஆனால், அவர் சொன்னது ரீசன் இல்லை, என சூப்பரான ரீசன் ஒன்றும் சொன்னார்.

இரிடேட் பண்ணும் அனிதா

இரிடேட் பண்ணும் அனிதா

அவங்க பண்றது, பேசுறது, கேம் விளையாடுறதுன்னு எல்லாமே ரொம்ப இரிடேட்டிங்கா இருக்கு, அதனால தான் கொடுத்தேன். சத்தியமா நம்புங்க, அவங்க எனக்கு கொம்பு வச்சதால நான் வைக்கல என ஷிவானி தனக்கு நல்லாவே பேசத் தெரியும் என்று பிக் பாஸ் ரசிகர்களுக்கு காட்டி விட்டார்.

யார் அந்த மம்மி

யார் அந்த மம்மி

அனிதாவுக்கு கொம்பு கொடுத்த ஷிவானி, கிரீடத்தை முன்னாள் மாடல் அழகி சம்யுக்தாவின் தலையில் வைத்தார். சும்மா கிரீடத்தை மட்டும் வைக்காமல், அவங்க என்ன குழந்தை போல பார்த்துக்குறாங்க, வெளியே என் மம்மிய ரொம்ப மிஸ் பண்றேன். இந்த வீட்டுல இவங்க தான் என் மம்மி என உருகி விட்டார்.

டென்ஷனான சம்யுக்தா ரசிகர்கள்

டென்ஷனான சம்யுக்தா ரசிகர்கள்

முன்னாள் மாடல் அழகியாக இருந்தாலும், சம்யுக்த்தாவின் அழகை பார்த்து அவரை இன்னமும் ரசித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ஷிவானி சொன்ன மம்மி வார்த்தை ரொம்பவே தைத்து விட்டது. அட்லீஸ்ட் அக்கான்னு கூட சொல்லியிருக்கலாம், ஒய் மம்மி? என ஷிவானி குழந்தையை குடைந்து வருகின்றனர்.

வெளியில இருக்குற மம்மி

வெளியில இருக்குற மம்மி

ஷிவானி நாராயணனின் அம்மா வெளியில் இருந்து கொண்டு, தனது பெண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் ஆக முடியவில்லை என்றால் கூட ஹவுஸ்மேட்ஸ் சொன்னது போல ரன்னர் அப்பாகவாவது ஆகி விட வேண்டும் என தினமும் தினுசு தினுசா ஷிவானி எடுத்து வச்சா போட்டோக்களை போட்டு அவரது வெற்றிக்கு உழைத்து வருகிறார்.

பிக் பாஸ் பிளான் போட்டுருப்பார்

பிக் பாஸ் பிளான் போட்டுருப்பார்

மேலும், சில நெட்டிசன்கள், இந்நேரம் நாரதர் பிக் பாஸ் பிளான் போட்டுருப்பார். மம்மின்னா சொல்ற ஷிவானி, அடுத்த வாரமே உனக்கும், சம்யுக்தாவுக்கும் இடையே நல்லா ஒரு சண்டை வர வச்சு, என்னை குழந்தைன்னு சொல்லாதீங்க என பாலாஜி மாதிரி ஒண்ணையும் பேச வைக்கல என் பேரு பிக் பாஸ் இல்லை என வில்லத்தனமாக அவர் யோசித்து இருப்பார் என ரசிகர்கள் இப்பவே சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X