பாலாவுக்காக அர்ச்சனாவை ஏமாற்றிய ஷிவானி.. அன்சீனில் அம்பலமான ரகசியம்.. என்ன தெரியுமா?

சென்னை: பாலாவுக்கு நான் தான் கால் பண்ணப் போகிறேன் என்கிற ரகசியத்தை ஷிவானியிடம் அர்ச்சனா சொல்லி இருந்தார்.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

அதை பாலாவிடம் சொன்ன ஷிவானி, அர்ச்சனாவிடம் இல்லை என்று பொய் கூறி ஏமாற்றியது அன்சீன் மூலம் அம்பலமாகி உள்ளது.

பாலுக்கு காவல் பூனையா என்பது போல, அர்ச்சனா அக்கா யாரை நம்பி அந்த ரகசியத்தை சொல்லி இருக்காங்க பாருங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

ஒப்பேற்றி விட்டனர்

ஒப்பேற்றி விட்டனர்

இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஸ்டமர் கேர் டாஸ்க்கை மட்டுமே வைத்து ஓட்டிவிட்டனர். அடுத்த வாரமும், இன்னொரு டீம் இதே புராணத்தை தொடர்ந்து மொக்கை போடுவார்கள் என தெரிகிறது. நிவர் புயல் காரணமாக அன்சீனில் போட வேண்டிய காட்சிகளை எல்லாம் நிகழ்ச்சியாகவே போட்டு இந்த வாரத்தை ஒப்பேற்றி விட்டனர்.

ஆரியிடமிருந்து பாலாவை காப்பாற்ற

ஆரியிடமிருந்து பாலாவை காப்பாற்ற

ஆரியிடமிருந்து பாலாவை காப்பாற்ற வேண்டும் என நினைத்து அர்ச்சனா போன் பண்ணி பேசினார் என்றே ஆரியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். பாலாவின் தனிப்பட்ட ரகசியத்தை அம்பலப்படுத்தவே அர்ச்சனா அவரிடம் போன் பண்ணி பேசினார் என்றே தோன்றுகிறது.

பர்சனல் மேட்டர்

பர்சனல் மேட்டர்

பாலாஜியின் கையில் பச்சைக் குத்தி இருக்கும் பெயரை காட்ட சொல்லி கேட்டு அர்ச்சனா பர்சனல் மேட்டரில் கை வைத்து தாக்கியதை ரசிகர்கள் வெகுவாகவே கண்டித்து இருந்தனர். பாலாஜி முருகதாஸுக்கு வெளியே ஒரு லவ்வர் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டவே அர்ச்சனா அப்படி செய்தார் என்றும் ட்ரோல்கள் பறந்தன.

ஷிவானியை நம்பி

ஷிவானியை நம்பி

இந்நிலையில், அர்ச்சனா நான் தான் முதல்ல போய் பேசப் போறேன், அதுவும் பாலாவுக்குத் தான் கால் பண்ண போறேன் என்பதை ஷிவானியை நம்பி சொல்லி இருந்தார். ஷிவானியிடம் ஏதும் சொல்லலையே என வெளியே வந்த பிறகும் அர்ச்சனா கேட்ட போது, சொல்லவில்லை என ஷிவானி அர்ச்சனாவிடம் பொய் பேசும் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது.

ரகசியத்தை சொன்ன ஷிவானி

ரகசியத்தை சொன்ன ஷிவானி

ஆனால், கஸ்டமர் கேர் டாஸ்க் தொடங்குவதற்கு முன்பாகவே, முதல் கால் பாலாஜிக்கு என்றும் போன் பண்ண போகிறவர் அர்ச்சனா என்றும் ஷிவானி கூறியிருந்தார். எப்படி தெரியும் என மற்றவர்கள் கேட்ட போது, அர்ச்சனா சொன்னார் என்று சொல்லாமல் தெரியும் என்று மட்டுமே ஷிவானி சொன்னது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த அன்சீனை பார்த்து நெட்டிசன்கள் ஷிவானியை திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X