கார்டன் ஏரியாவில் அமர்ந்து கண்ணீர் விட்ட ஷிவானி.. பாலாஜி எப்டி சொன்னாரு பாருங்க ஆறுதல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுதுக் கொண்டிருந்த ஷிவானிக்கு பாலாஜி ஆறுதல் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி, பாலாஜியுடன் கடலை போடுவதையும் அவருக்கு பணிவிடை செய்வதையும் தவிர இதுவரை பிக்பாஸ் வீட்டில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
இதனால் ஷிவானியை சமூக வலைதளங்களில் மிக்சர் என்றே அழைத்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்பட்டார் ஷிவானி.

ஷிவானிக்கு பப்ளிக் கால்
இதனைதொடர்ந்து இந்த வாரம் ஷிவானிதான் வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சனம் ஷெட்டியை வெளியேற்றி ஷிவானியை காப்பாற்றியது நிகழ்ச்சி குழு.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில், இந்த சீசனில் முதல் முறையாக பப்ளிக் ஒருவர் ஷிவானிக்கு கால் செய்தார்.

பதற்றமான ஷிவானி
அப்போது பேசிய அவர் உங்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்காங்க என்கிற காரணத்தால் வேண்டுமென்றே நாமினேஷனுக்கு வந்தீங்களா? என்றார். அதற்கு ஆமாம் என்றார் ஷிவானி, சிறிது பதற்றத்துடனே காலரிடம் பேசினார்.

கண்ணீர் விட்ட ஷிவானி
இந்நிலையில் நேற்றைய எபிசோடின் தொடக்கத்தில் அனிதா சனம் ஷெட்டியின் உடைமைகளை பேக் செய்து ஸ்டோர் ரூமில் கடிதத்துடன் எழுதி வைத்தார். அப்போது கார்டன் ஏரியாவில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார் ஷிவானி. இதனை பார்த்த பாலாஜி, ஏன்டி அழுவுற என்று அன்போடு கேட்டார்.

சம்பந்தமில்லாத விஷயம்
தோக்குறதும் ஜெயிக்குறதும் இங்கதான். நமக்கு லைஃப் வெளிலதான் இருக்கு என்றார். மேலும் ஷிவானி இதுதான் கேம்.
நான் பேசு என்று சொன்னபோதெல்லாம் சம்பந்தமில்லாத விஷயம் தேவையில்லாத விஷயத்தில் பேச மாட்டேன் என்று சொன்னாய்.

என்னை மாதிரி இரு..
அதுதான் உன் கேரக்டர் என்றால் அப்படியே இரு.
உனக்கு அடுத்த வாரமே வெளியே போகனும்ன்னா எனக்கு ஒகே தான். உனக்கும் ஓகே தானே என்றார். மேலும் ஹேப்பியா இரு என்னை மாதிரி கோபக்காரன் டொமஸ்ட்டிக் வயலென்ஸ் பண்றவன்னு பேர் வாங்கு என்று ஷிவானிக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications











