கன்ஃபெஷன் ரூமில் கதறியழுத ஷிவானி.. அழும்போதும் அழகாதான் இருக்கீங்க.. சமாதானப்படுத்திய பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கன்ஃபெஷன் ரூமில் ஷிவானி கதறியழுதது ரசிகர்களை கலங்க செய்துவிட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஷிவானி கிட்சனில் சப்பாத்தியை உருட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது பேசிய பிக்பாஸ், ஷிவானி அடுத்த சப்பாத்தியை உருட்டுறதுக்கு முன்னாடி கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க என்று அழைத்தார்.

ஜாலியா இருக்கணும்னு வந்தேன்

ஜாலியா இருக்கணும்னு வந்தேன்

இதனை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்கு சென்ற ஷிவானியிடம் நலம் விசாரித்த பிக்பாஸ், இத்தனை நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததை பத்தி சொல்லுங்க என்றார். அதற்கு இங்க வந்து 70 நாள் ஆயிடுச்சு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வந்ததேன்.

டிப்ரஷன் ஆயிடுச்சு

டிப்ரஷன் ஆயிடுச்சு

ஜாலியா இருக்கணும்னு தான் வந்தேன் என்ற கூறிய அவர் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து அழுதப்படியே சேவாகுற ஆர்டர் ரியல் ஆர்டரான்னு எனக்கு டவுட் வந்துருச்சு. அதை யோசிச்சு யோசிச்சு.. டிப்ரஷன் ஆயிடுச்சு. கன்ட்ரோல் பண்ண முடியல டிப்ரஷன.. என்னைப் பத்தி எபிசோடுல பேசமாட்டாங்க. பேசுற அளவுக்கு நான் ஏதும் பண்ணலன்னு நினைச்சுப்பேன்.

யாரை நம்புறதுன்னு தெரியல

யாரை நம்புறதுன்னு தெரியல

சேவிங் ஆர்டர்ல லாஸ்ட் வரைக்கும் என்னால பிரஷர் கன்ட்ரோல் பண்ண முடியல. எல்லாவாட்டியும் கடைசியாதான் என் பேர் வருது. யார்க்கிட்டேயாவது சொல்லி அழனும் போல இருக்கும். அது வேறமாதிரி ஆயிடுமோன்னு பயமா இருக்கு பிக்பாஸ். யாரை நம்புறதுன்னு தெரியல.

தேம்பி தேம்பி அழுதார்

தேம்பி தேம்பி அழுதார்

அதனால யார்க்கிட்டேயும் சொல்லி அழவும் கஷ்டமா இருக்கு. எல்லார்க்கிட்டேயும் போய் பேசி நானே ஜாலியா இருப்பேன்.
70 நாள்ல நான் நானாதான் இருந்திருக்கேன். இந்த வீட்டுல என்னோட பங்களிப்பு என்னன்னு தெரியல என்று குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுதார்.

யாரை மிஸ் பண்றீங்க?

யாரை மிஸ் பண்றீங்க?

இதனைக் கேட்ட பிக்பாஸ் ஷிவானி இந்த 70 நாள்ல நீங்க நீங்களாவே இருந்திருக்கிறதா சொல்லியிருக்கீங்க.. நீங்களாவே இருங்க.. என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிக்பாஸ் க
இத்தனைன நாளில் யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்று கேட்டார் பிக்பாஸ்.

அம்மாவ மிஸ் பண்றேன்

அம்மாவ மிஸ் பண்றேன்

அதற்கு அம்மாவ மிஸ் பண்றேன் என்று சொல்லி மீண்டும் கதறினார் ஷிவானி. அவங்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா என்று கேட்டார் பிக்பாஸ். அப்போது நல்லாருக்காங்களான்னு தெரியணும் டைமண்ட் நல்லாருக்கானான்னு கேட்டு சொல்லுங்க பிக்பாஸ்.

டைமண்ட் நல்லாருக்கானாம்

டைமண்ட் நல்லாருக்கானாம்

அவங்க கண் பார்வைக்கு நான் பண்ற ஏதாவது தவறா பட்டுச்சுன்னா ரொம்ப சாரி என்று மீண்டும் தேம்பி தேம்பி அழுதார். அவரது அழுகை பார்த்த பிக்பாஸ் அம்மா நல்லாருக்காங்க. டைமண்டும் நல்லாருக்கானாம் என்றார். தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார் ஷிவானி.

அழும்போதும் அழகுதான்

அழும்போதும் அழகுதான்

அப்போது ஷிவானியை அழைத்த பிக்பாஸ் அழும்போதும் அழகாதான் இருக்கீங்க என்றார். அதற்கு வெட்கப்பட்ட தேங்க்யூ பிக்பாஸ் என்ற ஷிவானி, ஷிவ்வுன்னு கூப்பிடுங்க பிக்பாஸ் என்றார். அதனைக் கேட்ட பிக்பாஸ் ஓகே ஷிவ்வு என்று கூறி அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X