ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஷிவானியுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்த ரேகாவுக்கு ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் அதன் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது விஜய் டிவி.
இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.

சனம் ஷெட்டியின் செல்பி
இதன் ஷுட்டிங் நிறைவடைந்த நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் பிரபலங்கள் எடுத்துக் கொண்ட செல்பிக்களை ஷேர் செய்து வருகின்றனர். அதன்படி ஆரி, அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் எடுத்த செல்பி வைரலானது.

அன்பு கேங்
அதேபோல் ரம்யா பாண்டியன் மற்றும் சோம்சேகர் ஜோடியாக எடுத்த போட்டோவும் வைரலானது. இதேபோல் அன்பு கேங்கை சேர்ந்தவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கதறிய ஃபேன்ஸ்
இதனை பார்த்த ரசிகர்கள், ஷிவானி எங்கே என கதறாத குறையாக கேட்டு வந்தனர். இந்நிலையில் ஷிவானியுடன் தான் எடுத்த செல்பியை ஷேர் செய்துள்ளார் நடிகை ரேகா. அதில் சிவப்பு நிற ஸ்லீலெஸ் லெஹாங்காவில் செம்ம க்யூட்டாக உள்ளார் ஷிவானி.

நீங்களாவது போட்டீங்களே
இதனை பார்த்த ரசிகர்கள், ஷிவானி எங்கே என கதறாத குறையாக கேட்டு வந்தனர். இந்நிலையில் ஷிவானியுடன் தான் எடுத்த செல்பியை ஷேர் செய்துள்ளார் நடிகை ரேகா. அதில் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் லெஹெங்காவில் செம்ம க்யூட்டாக உள்ளார் ஷிவானி.

சுரேஷுடன் செல்பி
ஷிவானியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தலைவி செம க்யூட் என புகழ்ந்து வருகின்றனர். இதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் சேர்ந்து எடுத்த செல்பியையும் ரேகா ஷேர் செய்துள்ளார்.

அப்படி ஒண்ணு போடுங்களேன்..
மேலும் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்தும் நடிகை ரேகா செல்பி எடுத்துள்ளார். அந்த செல்பியையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷிவானி மற்றும் பாலாஜியுடன் சேர்ந்து போட்டோ எடுத்து போடுங்கள் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











