எச்சிலை சாப்பிடுமளவுக்கு ஆயிடுச்சு..பாலாஜிக்கு ஊட்டிவிட்டு.. மசாஜ் செய்த ஷிவானி. ஒரே ரொமான்ஸ்தான்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆனால் பாலாஜியோ பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான ஷிவானியுடன் சில் செய்து வருகிறார்.

இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

ஏற்கனவே ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே சாஃப்ட் கார்னர் இருப்பதாக காட்டப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொஞ்ச நேரத்துல..

கொஞ்ச நேரத்துல..

வழக்கமாக 12 மணிக்கு வர வேண்டிய புரமோ இன்று தாமதமானது. இதனால் ரசிகர்கள் என்ன ஆச்சு என கேட்டு வந்தனர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் இரண்டாவது புரமோ இன்னும் கொஞ்ச நேரத்துல என விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

காதல் பொங்கி வழிகிறது

காதல் பொங்கி வழிகிறது

பின்னர் ஒரு வழியாக 1.30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியானது. வெளியில் நடக்கும் சம்பவங்களுக்கும் புரமோவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையே காதல் பொங்கி வழிகிறது.

கிட்ட வா என சைகை

கிட்ட வா என சைகை

ஷிவானி, கேபி மற்றும் ஆஜித் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பெட்டில் படுத்தப்படியே ஷிவானியை குறுகுறுவென பார்க்கும் பாலாஜி, கிட்ட வா என சைகை செய்கிறார்.

கண்களாலேயே பேசி

கண்களாலேயே பேசி

அவர் அழைத்ததும் துள்ளிக்குதித்து ஓடி வந்து பாலாஜியுடன் பெட்டில் அமர்கிறார். பின்னர் இருவரும் கையில் ஒரு பவுலை வைத்து ஏதோ ஸ்வீட் சாப்பிடுகிறார்கள். அப்போது இருவரும் கண்களாலேயே பேசி கொள்கின்றனர்.

ஊட்டிவிட்டு மசாஜ்

ஊட்டிவிட்டு மசாஜ்

தொடர்ந்து தான் சாப்பிட்ட எச்சில் ஸ்பூனால் பாலாஜிக்கு ஊட்டி விடுகிறார் ஷிவானி. இருவரும் ரொம்பவே நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் பாலாஜியை தனது மடியில் உள்ள தலையனையில் படுக்க வைத்து அவருக்கு மாசாஜ் செய்து விடுகிறார் ஷிவானி.

புலம்பும் கேபி

புலம்பும் கேபி

இதனை பார்த்த கேபி, என்னவேணா ஆகட்டும் இந்த உலகத்துல என கூறி அவர்கள் செய்யும் ரொமான்ஸை கண்ணாடி கதவுக்கு பின்னால் இருந்து முறைத்து பார்க்கிறார். அப்போது ஆஜித் ரிலாக்ஸ், எல்லாத்துக்கும் டென்ஷனா எப்படி என ஆறுதல் கூறுகிறார்.

நான் போய் கெடுக்றேன்

நான் போய் கெடுக்றேன்

மேலும் நான் போய் தலையிட்டு எல்லாத்தையும் கெடுக்றேன் என்று கூறி விட்டு உள்ளே செல்கிறார். இப்படியாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ.

ஹர்ட்டாகுது..

ஹர்ட்டாகுது..

ஏற்கனவே பாலாஜி தன்னை சிஸ்டர் என்று சொன்னதை ஏற்கவில்லை கேபி. சிஸ்டர் என்று சொல்லாதே ஹர்ட் ஆகுது என்றார். மேலும் பாலாஜியுடன் நேரம் செலவிடவும் விரும்பினார்.

அப்செட்டான கேபி

அப்செட்டான கேபி

இந்நிலையில் இன்றைய புரமோவில் பாலாஜியும் ஷிவானியும் நெருக்கமாக இருப்பதை பார்த்து அப்செட் ஆகிறார் கேபி. பாலாஜியும் முதலில் கேபியிடம் தான் நெருக்கமாக பழகினார். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் விரைவில் முக்கோண காதல் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X