நீங்க திமிர் பண்ணா.. நானும் பண்ணுவேன்.. பாலாஜியிடம் வரிந்துக்கட்டிய ஷிவானி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆட்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 17 பேர் வரை இருந்த வீட்டில் தற்போது 9 பேர் மட்டுமே உள்ளனர்.
அர்ச்சனா இருந்தவரை அவரே சமையலை பார்த்துக் கொண்டார். அவர் போன பிறகு யார் சமைப்பது என்ற சிக்கல் ஏற்பட்டதால் அனைவருமே சமையல் வேலையில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் வீட்டின் கேப்டனான பாலாஜி.

பால் ஊற்றிய ஷிவானி
இந்நிலையில் காஃபி மற்றும் டீ போடும் வேலையை பார்த்து வரும் கேபி சமையல் வேலையில் இருந்ததால் ஷிவானியை கப்களில் பால் ஊற்ற சொன்னார். இதனால் ஷிவானி கப்புகளில் பால் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அதிகமாக ஊற்றாதே எல்லாருக்கும் வரவேண்டும் என்றும் பாலா கூறினார்.

ரம்யாவிடம் பஞ்சாயத்து
அதற்கு நான் வாலன்டியர்தான், இந்த வேலையை செய்பவர் கேபிதான், அவரிடம் சொல்லுங்கள் என்று கூறினார் ஷிவானி. இதால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெளியே போன ஷிவானி, ரம்யாவிடம் நடந்த பஞ்சாயத்தை கூறினார்.

சப்ப மேட்டர்
பின்னர் ஷிவானியை சமாதனப்படுத்த வெளியே சென்றார் பாலா. அப்போது நான் செம கோவத்துல இருக்கேன் என்கிட்ட பேசாத என்றார் ஷிவானி. அதற்கு தப்பு என்றார் பாலாஜி, நீ பண்றது தப்பு இல்லையா என்று கேட்டார். அதற்கு சப்ப மேட்டர் என்று பாலாஜி சொல்ல, சப்ப மேட்டருக்கு நீ பண்ணதுதான் ஜாஸ்தி பதிலடி கொடுத்தார் ஷிவானி

நானும் திமிர் பண்ணுவேன்
மேலும் நீ எப்படி நடந்துக்றீயோ அப்படிதான் நான் நடந்துப்பேன். நீ திமிர் பண்ணா நானும் பண்ணுவேன். நீ சொன்னது நான் வேலை ஒழுங்கா செய்யாத மாதரி இருந்துச்சு, பாலை அதிகமா எடுத்தா மாதிரி எனக்கு அசிங்கமா இருந்துச்சு என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்.


Click it and Unblock the Notifications











