For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமாம்.. வாய்ஸ் ரைஸ் பண்ணுவேன்.. என்னா பண்ணுவ.. ஷிவானியை வெளுத்துவிட்ட கேபி.. வேற லெவல் சண்டை!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேபிக்கும் ஷிவானிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வீடே அதிர்ந்தது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் தீபாவளி கொண்டாட்டமாக பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் பாட்டியான அர்ச்சனா வைத்திருக்கும் சொத்து பத்திரங்களை திருட வேண்டும் என்று சோம், ரம்யா மற்றும் கேபி ஆகியோருக்கு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

    இப்போ ரம்யா பாண்டியனுக்கு யார் ஜோடி.. என்ன வேணா பண்ணுங்க ஆரியை டான்ஸ் மட்டும் ஆட சொல்லாதீங்க!

    ஆட்டைய போட்டார்..

    ஆட்டைய போட்டார்..

    தங்களுக்கான டாஸ்க்கை கச்சிதமாக செய்து முடித்தனர் சோம், ரம்யா, கேபி. இருந்த போதும் சோமுக்கே தெரியாமல் அதனை ஆட்டைய போட்டார் பாலாஜி. இதனை கேபி கண்டுபிடித்து ரம்யா மற்றும் சோமிடம் கூறினார்.

    ஹானஸ்ட்டா பதில் சொல்லுங்க

    ஹானஸ்ட்டா பதில் சொல்லுங்க

    அவர்கள் பெட்டுக்கு கீழே இருந்து எடுத்து விட்டாய் இல்லயா என்று கேட்க பாலாஜியிடம் ஓ.. அங்குதான் இருக்கா என வெறும் கவரை எடுத்து காட்டி ஆட்டம் போட்டார். அப்போது கேபி, ஹானஸ்ட்டா பதில் சொல்லுங்க என்றார்.

    எகிறிய ஷிவானி

    எகிறிய ஷிவானி

    அதற்கு பாலாஜி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார் ஷிவானி. ஏன் ஹானஸ்ட்டா பதில் சொல்லணும் என கேபியிடம் எகிறினார். ஷிவானியால் கடுப்பான கேபி நீ எதுக்கு பேசுற, நான் அவன்கிட்ட கேட்க்குறேன் அவன் பதில் சொல்றான்.

    வாய் ரைஸ்..

    வாய் ரைஸ்..

    நீ ஏன் பேசுற என கேட்க என் பெயர் வந்தது. அதனால் கேட்டேன் என்றார். உன் பேர நான் சொல்லல யார் சொன்னாங்களோ அவங்கக்கிட்ட போய் கேளு என்றார். அதற்கு ஷிவானி, இப்போ ஏன் வாய்ஸ ரைஸ் பண்ற என்று கேட்க, நீதான் வாய்ஸ் ரைஸ் பண்ற என கேபி கூறினார்.

    திணறிய ஷிவானி

    திணறிய ஷிவானி

    அப்போது ஷிவானி நீதான் முதல்ல வாய்ஸ ரைஸ் பண்ண என்றார். இதனால் கடுப்பான கேபி, ஆமாம் அப்படிதான் பண்ணுவேன் என்னா பண்ணுவ என கேட்டார். அவ்வளவுதான், பதில் சொல்ல முடியாமல் தவித்த ஷிவானி நானும் ரைஸ் பண்ணுவேன் என உளறினார்.

    கேபிக்கு காண்டு

    கேபிக்கு காண்டு

    ஷிவானி கேபி சண்டையால் பிக்பாஸ் வீடே அதிர்ந்தது. அவர்களின் சண்டையில் ரியோ, அர்ச்சனா, நிஷா உள்ளிட்ட முக்கிய தலைகள் யாரும் பங்கேற்கவில்லை. ஏற்கனவே ஷிவானி தன்னுடன் நெருக்கமாக இருந்த பாலாஜியை ஆட்டையை போட்டு விட்டார் என்ற காண்டில் இருந்தார் கேபி.

    புரோக்கன் ஹார்ட்

    புரோக்கன் ஹார்ட்

    இந்நிலையில் தானாக வந்து வலையில் சிக்கிய ஷிவானியை வச்சு செய்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷிவானி மிங்கிள் ஆக மாட்டேங்கிறார் என புரோக்கன் ஹார்ட்டுகளை கொடுத்தனர்.

    பாலாஜி மற்றும் ஷிவானியின் நெருக்கத்துக்கு வேட்டு வைக்க வரபோகும் நபர் | டாப் ஃபைவ் பீட்ஸ்
    இப்படி ஒரு மோதல்

    இப்படி ஒரு மோதல்

    அப்போது கேபிதான் ஹார்ட்டுகளை கொடுத்து நான் ஷிவானியுடன் ஃபிரண்டாக விரும்புகிறேன் என கூறினார். ஷிவானியுடன் தான் க்ளோஸாகவும் இருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் இப்படி ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Shivani fought with Gabi For Bala in Biggboss house. Bala stolen the will from Some Sekar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X