யோவ்.. என்ன நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா.. மீண்டும் பற்ற வைத்த பிக்பாஸ்.. காண்டான மிக்சர்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரிய வந்தது. இதில் ஆரி, ரம்யா, ஷிவானி ஆகியோர் நாமினேட்டாகியிருப்பதும் தெரிந்தது.

இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

நாமினேஷன் புராசஸ்

நாமினேஷன் புராசஸ்

இதில் நாமினேஷனுக்கான காரணத்தை கூறி ஹவுஸ்மேட்டுகள் மத்தியில் மீண்டும் கொளுத்தி போட்டுள்ளார். அதாவது, நாமினேஷன் புராசஸ் முடிந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும், லிவிங் ஏரியாவில் அமர்ந்திருக்கின்றனர்.

பீஸ கெடுக்குறாங்க..

பீஸ கெடுக்குறாங்க..

அப்போது பேசும் பிக்பாஸ், நாமினேஷன் முடிவுகள் வந்து விட்டன என ஹவுஸ்மேட்ஸ் நாமினேஷனுக்கு கூறிய காரணத்தை கூறி கொளுத்தி போடுகிறார். அதன்படி, பேக்கேஜ் வச்சுக்கிட்டு எல்லாரையும் தப்பா புரிஞ்சுக்கிறாரு.. ஹவுஸோட பீஸ கெடுக்குறாங்க.. சிரிச்சுக்கிட்டே பேசி ஹர்ட் பண்றாங்க என்று காரணங்களை அடுக்குகிறார்.

தவறான செயல்

தவறான செயல்

மேலும் பாலாவோட ஷேடோவுலதான் இருக்காங்க என்றும் மொத்த காரணத்தை கூறியுள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் இதை சொல்லும் போதே, ச்சை என கூறும் பாலாஜி, ரொம்ப தவறான செயல்ப்பா இது என்று அலுத்துக் கொள்கிறார்.

வேற ரீசனே இல்லையா

வேற ரீசனே இல்லையா

இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ரம்யா மற்றும் ஆஜித்துடன் வாக் செய்தப்படியே பேசும் ஷிவானி, யோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா என கேட்கிறார்.

யாருக்கு சான்ஸ்?

யாருக்கு சான்ஸ்?

பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆஜித்திடம் பேசும் ஷிவானி, யார்ரா இந்த வாட்டி, என எவிக்ஷன் ஆகப் போறவரை பற்றி கேட்கிறார். தொடர்ந்து ஆஜித்திடம் பேசும் பாலாஜி, உன்னை விட போறதுக்கு அதிகமா சான்ஸ் யாருக்கு இருக்கு என கேட்கிறார்.

ஆஜித் தானா?

ஆஜித் தானா?

அதற்கு பதில் சொல்லும் ஆஜித் என்னை விட அதிகமா சான்ஸ் எனக்கு தெரிஞ்சு யாருக்கும் தெரியல என கூறுகிறார். இதன் மூலம் ஆஜித்தும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்போ இந்த வாரம் பலி கடா ஆஜித் தானா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X