பழிக்கு பழி வாங்குற புத்தி இருக்கு.. குற்றம்சாட்டிய அனிதாவுக்கு ஸ்லிப்பர் ஷாட் பதில் கொடுத்த ஷிவானி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை பழிக்கு பழி வாங்குவதாக கூறிய அனிதாவுக்கு பக்கா பதிலடி கொடுத்தார் ஷிவானி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள செய்தி வாசிப்பாளரான அனிதாவுக்கு கொஞ்சமும் சகிப்புத் தன்மை இல்லை.

யார் என்ன சொன்னாலும் அதை ரொம்ப பெரிதுபடுத்திக் கொண்டு வம்படியாக நடந்து கொள்கிறார்.

கொம்பு க்ரீடம் டாஸ்க்

கொம்பு க்ரீடம் டாஸ்க்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், அரக்க குணம் கொண்டவர்கள் என நினைப்பவர்களுக்கு கொம்பும் பிடித்தவர்களுக்கு க்ரீடமும் கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க்கை கொடுத்தார்.

அதிக கொம்புகள்

அதிக கொம்புகள்

அப்போது ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கிரீடமும் பிடிக்காதவர்களுக்கு கொம்பும் கொடுத்து விளையாடினர். அந்த வகையில் பாலாஜிதான் அதிக கொம்புகளை பெற்றார்.

அனிதா கொடுத்த கொம்பு

அனிதா கொடுத்த கொம்பு

அவருக்கு அடுத்தப்படியாக சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிக கொம்புகள் கிடைத்தது. அர்ச்சனாவுக்கு அதிக கிரீடத்தை வழங்கினர் ஹவுஸ்மேட்டுகள். அப்போது ஷிவானி நாராயணனுக்கு கொம்பு வழங்கினார் அனிதா.

அனிதா சொன்ன காரணம்

அனிதா சொன்ன காரணம்

ஏன் அவருக்கு கொம்பு வழங்கினார் என்பதற்கான காரணத்தை ரொம்பவே ரூடாக கூறினார் அனிதா. அதாவது, எல்லோரும் ஷிவானியை எல்லோரும் குழந்தைத்தனமாக இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் ஷிவானியிடம் குழந்தைகளிடம் இல்லாத ஒரு இயல்பு உள்ளது என்றார்.

என்னை பழி வாங்குகிறார்

என்னை பழி வாங்குகிறார்

அதாவது ஷிவானியிடம் பழிக்கு பழி வாங்கும் எண்ணம் உள்ளது. நான் எப்போதோ அவரை டாஸ்க்கில் நெகட்டிவ் மார்க் கொடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு, எப்போது என்ன டாஸ்க் வந்தாலும் நான்தான் வொர்ஸ்ட் என குத்துகிறார்.

எரிச்சலாக்கிய அனிதா

எரிச்சலாக்கிய அனிதா

இந்த பழிவாங்கும் இயல்பு குழந்தைகளிடம் இருக்காது. ஆகையால் அவருக்கு கொம்பு கொடுத்துள்ளேன் என்றார். அனிதாவின் இந்த பேச்சு கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. பார்வையாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.

ஷிவானி சொன்ன காரணம்

ஷிவானி சொன்ன காரணம்

அவரை தொடர்ந்து, க்ரீடத்தையும் கொம்பையும் கையிலெடுத்த ஷிவானி, கொம்பை அனிதாவுக்கே வழங்கினார். அதற்கான காரணத்தை கூறிய அவர், அனிதா செய்யும் சில வேலைகள் எரிச்சலாய் இருக்கிறது அதனால் தான் கொம்பு கொடுக்கிறேன்.

எனக்கு அவசியம் இல்லை

எனக்கு அவசியம் இல்லை

மற்றப்படி அவர் சொன்னது போல் பழிக்கு பழி வாங்கும் எண்ணம் எதுவும் இல்லை. அவர் எப்போது என்னை நாமினேட் செய்தார் என்று கூட எனக்கு நினைவில்லை. அவராய் ஏதாவது நினைத்து கொண்டால் அதை புரிய வைக்க வேண்டிண அவசியம் எனக்கில்லை என தடாலடியாக பதில் கொடுத்தார்.

பின்னால் குத்தும் அனிதா

பின்னால் குத்தும் அனிதா

ஷிவானியின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள், அனிதாவுக்கு சரியான பதிலடி என பாராட்டி தள்ளினர். அனிதா தன்னைப் பற்றி யாராவது ஏதாவது பேசிவிட்டால் அவர்களை குத்துவதையே வேலையாக வைத்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X