ஷிவானிக்கு கோபம் வருது வசி.. அதுவும் யார் கிட்ட சண்டை போட்டு முறைச்சாங்க தெரியுமா? வேற லெவல்!

சென்னை: எல்லாருமே இந்த வீட்டில் ரொம்ப போரிங் என ஆரியையும் ஆஜீத்தையும் சொல்லிட்டு வந்த நிலையில், சொல்லி வச்சது மாதிரி ஆரியும், ஆஜீத்தும் ஷிவானியை சொன்னாங்க..

ஆஜீத் சொல்லும் போது கூட அமைதியா இருந்த ஷிவானி, ஆரி சொல்லும் போது, நீயெல்லாம் என்ன சொல்லாத என்கிற ரேஞ்சுக்கு எகிற ஆரம்பித்து விட்டார்.

சிட்டி ரோபோவுக்கு உணர்ச்சி வந்ததை போல ஷிவானிக்கு கோபம் வருது வசி என பிக் பாஸ் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மிங்கிள் ஆகல

மிங்கிள் ஆகல

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த நாளே ஷிவானி யார் கூடவும் மிங்கிள் ஆகல என்கிற குற்றச்சாட்டை ஏகப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் வைத்து அவருக்கு ஹார்ட் பிரேக் கொடுத்தாங்க, இப்பவும் அவர் அந்த அளவுக்கு யார் கூடவும் மிங்கிள் ஆன மாதிரி தெரியல, பாலா மற்றும் கேபி கூடத்தான் கொஞ்சம் பேசுறாங்க..

ஜெயில் கைதி

ஜெயில் கைதி

போன வாரம் போரிங் போட்டியாளர்னு பெயர் எடுத்த ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ் கூட சேர்ந்து முதல் முறையா கண்ணாடி வச்ச ஜெயில்ல கைதியானாங்க.. அந்த ரூமுக்குள்ள அவங்க முறைச்சதா பார்த்த ரசிகர்கள், வெளியே வந்து ருத்ர தாண்டவம் ஆடுவாங்கன்னு பார்த்தா, அரக்கி வேஷம் போட்டும் அழகான ராட்சசியா ராம்ப்வாக் தான் பண்ணாங்க..

ஷிவானிக்கு கோபம் வருது வசி

ஷிவானிக்கு கோபம் வருது வசி

இளவரசியா கெட்டப் போட்டுக்கிட்டு இருக்கப்ப தான் சனம் ஷெட்டியை முறைச்சி எதிர்த்து கேள்வி கேட்டு சண்டை போட்டார். பாலாஜி உடன் ஓடி பிடித்து விளையாடு ரசிகர்களை கொஞ்சம் சந்தோஷப்படுத்தினார் ஷிவானி. இந்த நிலையில், போன எபிசோட்ல நடிகர் ஆரியையே முறைத்துப் பேச ஆரம்பித்து விட்டார்.

நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத

நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத

அனிதா சம்பத், ஆஜீத் கூட போரிங் போட்டியாளர்னு மறுபடியும் இந்த வாரமும் ஷிவானியை நாமினேட் பண்ணும் போது கூட அமைதியா இருந்த ஷிவானி, எல்லா ஹவுஸ்மேட்ஸும் ஆரியை நாமினேட் பண்ண நிலையில், அந்த ஆரியே போரிங்னு ஷிவானியை சொன்னவுடன் ஆத்தாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு, நீ தான் போரிங் என திருப்பி அடிக்க ஆரம்பித்து விட்டார்.

என் ஐடியாவ யாருமே கேக்கல

என் ஐடியாவ யாருமே கேக்கல

ரியோ டீம் அரக்கர்கள் டாஸ்க்ல மத்த சென்ஸ்களை வச்சு விளையாடின மாதிரி நாமளும் விளையாடலாம்னு என் ஐடியாவ சொன்னேன் யாருமே கேக்கல, அதான் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை அமைதியாகிட்டேன் என்கிற மாதிரி ஷிவானி பேசியதும், என் கிட்ட வந்து சொன்னியாம்மா என மறுபடியும் ஆரி மொக்கை போட, நீ எல்லாம் அவ்ளோ வொர்த் இல்லை என்கிற ரேஞ்சுக்கு ஷிவானி லுக் விட்டார்.

கடுப்பை காட்டிய ஆரி

கடுப்பை காட்டிய ஆரி

நான் சொன்ன மாதிரி பண்ணி இருந்தா நாம அவங்களை விட சூப்பரா ஜெயிச்சிருக்கலாம் என ஷிவானி, தன்னை போரிங் என சொன்ன ஆரியை எதிர்த்து முறைத்து பேசினார். நீயே சொல்லியும் கேட்கலைன்னா நம்மகிட்ட டீம் கோ ஆர்டினேஷன் இல்லை என அர்ச்சனா மற்றும் சுரேஷ் மீது கடுப்பை காட்டினார்.

Recommended Video

Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil
ஷிவானி ஆட்டம் ஸ்டார்ட்

ஷிவானி ஆட்டம் ஸ்டார்ட்

எப்படியோ ஷிவானி நாராயணனை அடிக்கடி டிவியில காட்டுங்க, அதுவும் நேத்து தொடை தெரிய டிரெஸ் பண்ணிக்கிட்டு அவங்க உட்கார்ந்திருந்த அழகும், ஆரியை நாமினேட் பண்ணும் போது பிக் பாஸ் அவங்களை வச்சி கலாய்ச்ச அப்புறம் ஒரு நடை நடந்து போனாங்களே எல்லாமே சூப்பர். ரன்னர் அப் பதவியெல்லாம் ஹவுஸ்மேட்ஸ் உங்களை நம்பி கொடுத்து இருக்காங்க, இனியாவது நல்லா கேம் ஆடுவாங்களா ஷிவானின்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X