For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் மானத்த குழி தோண்டி புதைச்சுட்ட.. கிறுக்கு மாதிரி சுத்தாத.. வச்சு வச்சு செய்த ஷிவானி அம்மா!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் அவரை விளாசி தள்ளினார்.

    சென்னை: கண்ணீர்விட்டே பஞ்சரான பயில்வான் பாலா.. கண்டு கொள்ளாத ஷிவானி அம்மா..!

    பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் ஃபைனல்ஸை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியது.

    அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா, அவரை கிழித்து தொங்கவிட்டார். பாலாஜி பின்னால் சுத்ததான் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தீயா என்றும் கேட்டு கன்னாபின்னாவென திட்டினார்.

    சமாதானப்படுத்திய ரம்யா

    சமாதானப்படுத்திய ரம்யா

    அம்மா இப்படி பேசுவார் என்று சற்றும் எதிர்பாராத ஷிவானி, ஏம்மா இப்படி பேசுறீங்க என்று அழுதுக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான ஷிவானியின் அம்மா அகிலா, எழுந்து உள்ளே சென்றார். அப்போது வெளியே அழுதுக் கொண்டிருந்த ஷிவானியை சமாதானப்படுத்தினார் ரம்யா.

    டிஃபெண்ட் பண்ணி பேசுறீயா?

    டிஃபெண்ட் பண்ணி பேசுறீயா?

    அவரிடம் அழுதப்படியே இந்த மாதிரி பேச்செல்லாம் கேட்டது இல்லை.. இப்படி பண்ணக்கூடாது.. அம்மா இப்படி பேசியிருக்கக்கூடாது என்று புலம்பினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஷிவானியிடம் வந்த அகிலா, இப்போவாது ஏதாவது பேச முடியுதா? நான் இவ்ளோ பேசுறேனே என்னை டிஃபென்ட் பண்ணி பேசுறீயா?

    வாய் கிழிய பேசுன

    வாய் கிழிய பேசுன

    ஏதாவாது செஞ்சிருந்தா தானே பேச முடியும். வாய் கிழிய என்கிட்ட பேசிட்டு வந்த? ஏதோ மிஸ்டேக் பண்ணியிருக்க.. அதான் நீதான் சேஞ்சு பண்ணிக்கணும். எதுக்கு வந்திருக்கன்னே தெரியல.. உன் அம்மா உடம்பு முடியலன்னாலும் 4 வருஷமா உனக்காக கஷ்டப்பட்டேன்.

    மானத்த குழி தோண்டி புதைச்சுட்ட

    மானத்த குழி தோண்டி புதைச்சுட்ட

    ஷுட்டிங் ஸ்பாட்ல வந்து உட்காந்திருக்கேன். என்னை பெருமைபடுற மாதிரி என்ன செஞ்சுருக்க. சொந்தக்காரங்க, அப்பா, தாத்தா பாட்டின்னு எல்லார் முன்னாடியும்

    என் மானத்த குழி தோண்டி புதைச்சுட்ட. என்னை

    அசிங்க அசிங்கம்மா திட்டு வாங்க வச்சுட்டு இங்க வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கொட்டி தீர்த்தார்.

    இன்டிவிட்ஜூவலா விளையாடனும்

    இன்டிவிட்ஜூவலா விளையாடனும்

    தொடர்ந்து பேசிய அவர் ஒரே குழந்தையாய் வளர்ந்ததால் இந்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கட்டும் என்றுதான் அனுப்பி வைத்தேன். எல்லாரும் ஃபிரண்ட்ஸ்தான்.. ஆனாலும் கேம் இன்டிவிட்ஜூவலா விளையாடனும். ஒருத்தர ஒருத்தர் ஹெல்ப் பண்ணி விளையாடக்கூடாது.

    நீ எதுக்கு எழுப்புற..

    நீ எதுக்கு எழுப்புற..

    எத்தனையோ பேரு இந்த பிளாட்ஃபாம் கிடைக்காம இருக்காங்க. கிடைச்ச பிளாட்ஃபார்ம்ல யாருமே பைத்தியக்காரத்தனமாக நடந்துக்க மாட்டாங்க.. வேக்கப் சாங் போட்டா எல்லாரும் எழுந்திரிக்கப் போறாங்க. நீ எதுக்கு எழுப்புற? ஆரி நாமினேஷன்ல காதல் கண்ண மறைக்குதுன்னு ஒரு டேக் லைன் சொன்னதுக்கு அந்த பையன் அப்படி குதிச்சான்.

    வாயை பொத்திக்கிட்டு இருந்த?

    வாயை பொத்திக்கிட்டு இருந்த?

    நான் இங்க லவ் பண்ண வரல, லவ் வந்தா சொல்றேன் ஓகேவான்னு சொல்றான் நீ ஏன் வாயை பொத்திக்கிட்டு இருந்த. எனக்கும் லவ் இல்ல, கேம் விளையாடதான் வந்துருக்கேன்னு சொல்ல வேண்டியதுதானே.. இனிமே நல்ல பொண்ணா இரு.. சந்தேஷமா விளையாடு.. எல்லாரும் டார்கெட் பண்ணிதான் விளையாடுறாங்க.

    எதையும் போட்டு குழப்பிக்காத

    எதையும் போட்டு குழப்பிக்காத

    நீ கிறுக்கு மாதிரி சுத்தாத.. போனதெல்லாம் போகட்டும் இனிமே நல்ல பொண்ணா இருக்கணும். மன வலிமையோடு விளையாடு என்று கூறினார். இறுதியாக புறப்பட்ட தனது அம்மாவிடம், உடம்பை பார்த்துக்கோ.. என் அன்பு எங்கேயும் போகல.. நீ எதையும் போட்டு குழப்பிக்காத என்று கூறி அனுப்பினார் ஷிவானி.

    English summary
    Shivani's mother scolded her second time also in Biggboss house. Shivani mother told she spoiled her respect. She asked Shivani to be a good girl.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X