Just In
- 46 min ago
கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா? டிரெண்டாகும் #Thalapathy65
- 1 hr ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 1 hr ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 1 hr ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
Don't Miss!
- News
திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்!
- Finance
கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..!
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரவுடி மாதிரி பண்ணாத.. பாலாவை பார்த்து ஜொள்ளு விடும் ஷிவானி.. 3வது புரமோவுல மீண்டும் ரொமான்ஸ்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
குண்டு ரோபோ என பாலா கிண்டல் பண்ணதால், கடுப்பாகி இருந்த ஷிவானி, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், மறுபடியும் பாலா பெட்டில் அமர்ந்து கொண்டு கொஞ்சி குழாவும் காட்சிகள் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன.
ரவுடி மாதிரி பண்ணாத என செல்லமாக ஷிவானி சொல்ல, நீயும் போயிட்டா என்ன பண்ணுவேன் என ஷிவானியை பேக் பண்ணி அனுப்பவே பாலா குறியாக இருக்கிறார்.

டார்கெட் ராஜா ஆரி
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ஆரியை அர்ச்சனாவின் வேல் கேங் திட்டம் போட்டு கவுப்பதற்கான வேலைகளை செய்து வருவதை காட்டினர். ரியோ ராஜ், ஆரியை போரிங் போட்டியாளர் என நாமினேட் பண்ண, அப்படி நீ என்னப்பா சுவாரஸ்யமா பண்ணி கிழிச்சிட்ட என ஆரி ஆர்மியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆரி பக்கமே போக வேண்டாம் அவர் டஃப் என அர்ச்சனா பயந்து ஒதுங்கி தானே நிஷா, ஆஜீத் மற்றும் பாலாவை அவுட்டாக்கினார்கள்.

அர்ச்சனாவிடம் பம்முற
இரண்டாவது புரமோவில் ரியோவை அனிதா சீண்ட, உடனே நிஷா எகிறி வந்து சண்டை போடுகிறார். அப்பா மேட்டரை இழுத்த நிஷாவிடம் முறைத்துக் கொண்ட அர்ச்சனா, அதே அப்பா மேட்டரை வைத்துத்தானே நிஷாவை அவுட் ஆக்கினாங்க, அப்போ அதுக்கு நிஷா ஏன் அர்ச்சனாவிடம் எகிறாமல் அப்படி பம்முறாங்க, டீம் பிரிஞ்சாலும், அர்ச்சனா போட்ட அடித்தளம் கொஞ்சமும் அசையவில்லை. அடிச்ச விபூதி அப்படி!

யார் எக்கேடு கெட்டா
இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரமோவில் யார் எக்கேடு கெட்டு அடிச்சிட்டு செத்தா நமக்கென்ன, நாம தனியா ஷிவானியோடு வேர்க்கடலை சாப்பிடுவோம் என பாலாவும் ஷிவானியும் தனியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க.. என் பக்கம் அட்டென்ஷனை திருப்பு என பாலா, கெஞ்ச போடா என ஷிவானி சொல்வதும், போடி என பாலா கொஞ்சுவதுமாக 3வது புரமோ அமைந்துள்ளது.

ரவுடிசம்லாம் காட்டாத
ஷிவானியிடம் பாலா நேற்று கண் கலங்கி அழுத சீனை புரமோவில் காட்டி விட்டு நிகழ்ச்சியில் கட் பண்ணிட்டாங்க, அதே போல, ஷிவானியை குண்டு ரோபோ என பப்ளிக்கா பாலா கலாய்த்த நிலையில், அவரிடம் கோபித்துக் கொண்டு போன ஷிவானி இப்போ ரவுடிசம்லாம் இங்க காட்டாத என பாலாவை பார்த்து ஜொள்ளு விடுவது பார்க்கவே சகிக்கல..

பட்டம் கொடுத்துருப்பாங்க
சனம் இருந்தா உனக்கு அழகா பட்டம் கொடுத்துட்டே இருந்துருப்பாங்க, அவங்களும் போயிட்டாங்க, நீ பட்டம் கொடுக்க ஆள் இல்லாமல் ஓவரா ஆடிட்டு இருக்க என பாலாவை நல்லாவே வச்சு செய்துள்ளார் ஷிவானி. உடனே பாலா சொன்ன அந்த வார்த்தை ஷிவானியை ரொம்பவே கடுப்பேற்றியது.

நான் போவேன் நீ இருப்பியா
உடனே நீயும் போயிட்டா அதுக்கு கூட ஆளிருக்காதே என அடுத்து ஷிவானியை பேக் பண்ண பாலா துடித்துக் கொண்டிருப்பதை வெளிப்படையாக பேச, நான் போவேன் நீ இருப்பியா.. நீ வெளியே போனாலும், நான் இந்த வீட்டிலே இருந்து எனது ரசிகர்கள் ஆதரவால் டைட்டில் வின்னர் ஆகிடுவேன் என்கிற நினைப்பில் இருப்பது போல ஷிவானி பேசியதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.