For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஷிவானிக்கு ஜோடி இவர் தான்.. செல்லம்மா பாட்டுக்கு செம சூப்பராக ஆடும் பாலாஜி.. இது தான் வெறித்தனம்!

  |

  சென்னை: விஜய் மியூசிக்கில் வெளியாகி உள்ள அன்சீன் புரமோவில், பாலாஜி முருகதாஸும், ஷிவானி நாராயணனும் டாக்டர் படத்தின் செல்லம்மா பாட்டுக்கு செம சூப்பராக ஆடும் புரமோ வெளியாகி உள்ளது.

  இப்படித்தான் நேற்று ரியோவும், நிஷாவும் ஆடிய புரமோவை போட்டு அன்சீன் புரமோ என வெளியிட்டு கடுப்பேத்தினார்கள்.

  இன்னைக்கு இதையும் அன்சீன் புரமோவாக வெளியிட்டுள்ளனர். ஆனால், இது 4வது புரமோ என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் விஜய் டிவியிலேயே ரசிகர்கள் மிஸ் பண்ணாம இந்த ஆட்டத்தை கண்டு ரசிப்பார்கள்.

  இந்த வாரம் வெளியேற போறது இவர் தான்.. ஃபைனலில் இந்த 4 பேரு தான்.. வைரலாகும் எவிக்ஷன் விவரம்?

  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

  பிக் பாஸ் தமிழ் 4ல் இந்த வாரம் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும், பொட்டியில் வரும் இணையின் பெயரோடு சேர்ந்து கொடுக்கப்பட்ட உடைகளை நொடிப் பொழுதில் உடுத்திக் கொண்டு நடனமாட மேடைக்கு வந்து நல்லா ஆட வேண்டும். அவசரத்துல ஆஜீத் ஜிப்பே போடாமல் வந்தது நேற்றைய ஹைலைட்.

  கேபி ஆஜீத் ஜோடி

  கேபி ஆஜீத் ஜோடி

  முதல் பாக்ஸ் வந்ததும் ஆஜீத் மற்றும் கேபிரியல்லாவின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இருவரும் தனுஷின் மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாட்டுக்கு செம குத்தாட்டம் போடுகின்றனர். இதுக்காக தனியாக பண்ண ரிஹர்சலை ஆவது அன்சீனில் போட்டு இருக்கலாம். டக்குன்னு ஆஜீத் எப்படி இப்படி ஆடுறாருன்னே தெரியாம ரசிகர்கள் குழம்பித் தவித்தனர்.

  ஆடலுடன் பாடலை கேட்டு

  ஆடலுடன் பாடலை கேட்டு

  எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில் படத்தில் வரும் ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் என்ற பாடலுக்கு நடிகர் ரியோ மற்றும் நிஷா அக்கா மேக்கப் போட்டுக் கொண்டு காமெடி டான்ஸ் ஆடினார்கள். அதன் பின்னர், இருவரும் சேர்ந்து பண்ண காமெடி எபிசோடு தான் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

  என்னடா ரஜினிக்கு வந்த சோதனை

  என்னடா ரஜினிக்கு வந்த சோதனை

  சூப்பர் ரஜினிகாந்தின் வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள பாட்டுக்கு சனம் ஷெட்டியும் வேல்முருகனும் டான்ஸ் ஆடினார்கள். கிளிட்டர் உடையை அணிந்து கொண்டு, குதித்துக் கொண்டிருந்த வேல்முருகனை பார்த்த ரசிகர்கள், என்னடா ரஜினிக்கு வந்த சோதனை என கமெண்ட் அடித்து கலாய்த்து தள்ளினர். அதனை சரி செய்யும் விதமாக, சனம் ஷெட்டியை கண்டபடி தொட்டுத் தூக்கி ஸ்கோர் செய்தார்.

  சின்ன மச்சான் சூப்பர் சுரேஷ்

  சின்ன மச்சான் சூப்பர் சுரேஷ்

  எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டு இருந்த சுரேஷ் சக்கரவர்த்தியையும், அனிதா சம்பத்தையும் ஜோடி சேர்த்து சின்ன மச்சான் பாட்டுக்கு ஆட வைத்து தரமான சம்பவத்தை செய்திருந்தார் பிக் பாஸ். அனிதா சம்பத் எந்தவொரு ஹெசிடேஷன் இன்றி, பெட்டியில் பெயர் வந்ததும், டக்குன்னு வேட்டி சட்டை போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடி மொட்டை தாத்தாவை கொஞ்சி ஆடி அரங்கத்தை அதிர செய்தார்.

  ஷிவானிக்கு ஜோடி இவர் தான்

  ஷிவானிக்கு ஜோடி இவர் தான்

  4 ஜோடிகள் ஏற்கனவே நடனம் ஆடியுள்ள நிலையில், இன்று அடுத்த 4 பேர் நடனம் ஆடுவதை காட்டவுள்ளனர். விஜய் டிவியில் வெளியான புரமோ வீடியோக்களில் அர்ச்சனாவின் வரவையே ஹைலைட் செய்துள்ளனர். தற்போது விஜய் மியூசிக்கில் வெளியாகி உள்ள அன்சீன் புரமோவில் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  செல்லம்மா செல்லம்மா

  செல்லம்மா செல்லம்மா

  சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக அனிருத் போட்ட செல்லம்மா செல்லம்மா பாட்டுக்குத்தான் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் நடனம் ஆடுகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், தினமும் காலையில் வீட்டில் பாட்டு போட்டவுடன் ஆடி அசத்தும் ஷிவானி, பாலாஜி உடன் இணைந்து வேற லெவல் பர்ஃபார்மன்ஸை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளார்.

  லவ் ஸ்டார்ட் ஆகுமா

  லவ் ஸ்டார்ட் ஆகுமா

  சனம் ஷெட்டியுடன் பாலாஜி முருகதாஸுக்கு லவ் ஸ்டார்ட் ஆகும் என்று பார்த்தால், பிக் பாஸ் இப்போ ஷிவானி நாராயணனுக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் முடிச்சுப் போட்டுள்ளார். இதுக்கு அப்புறம் இவங்களுக்குள்ள ஏதாவது லவ் போர்ஷன் ஸ்டார்ட் ஆகுமா என்பதை ரசிகர்கள் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

  English summary
  Shivani Narayanan and Balaji Murugadoss paired up for Doctor song Chellamma tonight. Latest promo of their dance video goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X