கலக்கலாக ஓணம் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்...இதுல யாரு உங்க ஃபேவரைட்!
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை மூலம் பிரபலமான நடிகைகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கேரளாவின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் திருவிழா புராண மன்னர் மகாபலி கேரளாவுக்கு திரும்பியதை கொண்டாடும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

ஓணம் வந்து விட்டாலே கேரள பெண்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் களைகட்டும். காரணம் ஓணம் அன்று உடுத்தக்கூடிய வெண்மை நிற புடவையை அனைத்து பெண்களுக்குமே ஒரு நாளாவது கட்டிப் பார்க்க ஆசைப்படுவார்கள்.
அனிகா: குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நடிக்க துவங்கிய அனிகா. தமிழில் நானும் ரௌடி தான், மிருதன், மாமனிதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தற்போது வளர்ந்து கதாநாயகியாக பல படங்களில் நடித்துவருகிறார். ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் அழகான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷிவானி நாராயணன்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். கடைக்குட்டி சிங்கம், விக்ரம், நாய் சேகர், பம்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகை ஷிவானி நாராயணன் தனது ஓணம் கொண்டாட்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

தர்ஷா குப்தா: சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா விஜய் டிவியின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்தார். ருத்ரதாண்டவம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் தர்ஷா குப்தா, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஓணம் பண்டிகைக்கு கோவில் குளக்கரையில் அமர்ந்து க்யூட்டாக வாழ்த்து கூறியுள்ளார்.

ஸ்ரீநிதி: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த 7C என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமாகமானவர் ஸ்ரீநிதி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இருந்த யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார். அஜித்தின் வலிமை படம் குறித்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையில் சிக்கினார். பல நாட்களாக காணாமல் போய் இருந்த ஸ்ரீநிதி தற்போது ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications