என்ன இப்படி சொரியுது ஷிவானி.. செம நக்கல் ரம்யாவுக்கு.. உள்ள அவங்களுக்கும் போர் அடிக்குதாம்!

சென்னை: அய்யய்யய்யோ ஆனந்தமே பாடலை காலை நல்லா வறட்டு வறட்டுன்னு சொரிந்து கொண்டே ஷிவானி பாடும் காட்சி அன்சீன் புரமோவில் இடம்பெற்றுள்ளது.

ரோபோ டாஸ்க்கில் ஷிவானி நாராயணனை மூக்கு நோண்ட வைத்தும், காது குடைய வைத்தும் ரியோ ரொம்பவே டார்ச்சர் பண்ணது பார்வையாளர்களை அருவருப்படைய செய்த நிலையில், இந்த கொடுமை வேற..

இதையெல்லாம் கட் பண்ணி தூக்கி இருக்கலாமே எடிட்டர் என்றும், தயவு செஞ்சு அன்சீன்லயே வச்சிடுங்க என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

சொரியும் ஷிவானி

சொரியும் ஷிவானி

அய்யய்யய்யோ ஆனந்தமே என பாடிக் கொண்டே தனது காலை வறட்டு வறட்டென ஷிவானி சொரியும் அருவருப்பான காட்சி தற்போது வெளியான அன்சீன் புரமோவில் இடம்பெற்றுள்ளது. ஷிவானியை படுத்துக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பங்கமாக கலாய்த்து வருவது சிறப்பு.

ஆடியன்ஸின் மனசாட்சி

ஆடியன்ஸின் மனசாட்சி

அய்யய்யய்யோ என ஷிவானி ஆரம்பிக்கும் போதே, போரடிக்குதே என ரம்யா பாண்டியன் அப்படியே ஆடியன்ஸின் மனசாட்சியாக மாறி ரம்யா பாண்டியன் கொடுக்கும் செம நக்கலான ட்ரோல் ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டது. எல்லா பாட்டையும் இது கெடுக்குதே என ஷிவானியும் பாட்டாலே பதில் சொல்லிட்டாங்க..

எப்போதும் தூக்க கலக்கம்

எப்போதும் தூக்க கலக்கம்

அடுத்ததாக எங்கேயோ பார்த்த மயக்கம் பாட்டை பாட ஆரம்பித்தார் ஷிவானி, உடனே எப்போதும் தூக்க கலக்கம்.. சப்பாத்தில என்ன கலந்தீங்க.. தின்னதுக்கு அப்புறம் சொக்காதீங்க என மறுபடியும் ஷிவானியின் பாட்டைக் கெடுத்து ரம்யா ட்ரோல் சாங் பாட ஆரம்பித்தார். உண்ட மயக்கத்தில் பண்ணும் அரட்டை எல்லாம் போடுறீங்களே என ரசிகர்கள் நொந்து வருகின்றனர்.

இதுதானா 3வது புரமோ

இதுதானா 3வது புரமோ

வழக்கமாக 3வது புரமோவில் காட்டுவதை அன்சீனாகவும், அன்சீன் புரமோவில் காட்டுவதை நிகழ்ச்சியில் வைப்பதால், இதுதானா 3வது புரமோ, இந்த கொடுமையை வேற நிகழ்ச்சியில் பார்க்கணுமா என ரொம்பவே பிக் பாஸ் ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர். சீக்கிரமே கொஞ்சம் நல்லா எனர்ஜியான சீன்களை வைங்கப்பா.. போரடிக்குது என்றும் கத்த ஆரம்பித்து விட்டனர்.

படுத்தே விட்டானய்யா

படுத்தே விட்டானய்யா

எப்போதுமே ஜூக் பாக்ஸாக பிக் பாஸ் வீட்டில் பாடித் திரியும் ஆஜீத்துக்கு போட்டியாக ரெண்டு பாடகிகள் புதுசா முளைத்த நிலையில், எனக்கு ரெஸ்ட் கொடுங்கடான்னு பக்கத்துல, கம்முன்னு படுத்து தூங்கிவிட்டார் அதையும் விடாமல் நெட்டிசன்கள் படுத்தே விட்டானய்யா இவங்க பாடுற கொடுமையை கேட்டுன்னு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X