பேய் வீடு மாதிரி இருந்தது.. பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்த ஷிவானி, ரியோ.. ஆனா எதுக்கு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரொம்பவே அமைதியாக இருந்த ஷிவானி நாராயணன் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது பிக் பாஸ் அனுபவத்தை கூறியுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தது ஷிவானி நாராயணன் தான்.
ஆனால், கடைசி வரை பாலாவின் நிழலாகவே ஷிவானி இருந்ததால் அவரது தனித் தன்மையை ரொம்பவே மிஸ் செய்தார்.

பேய் வீடு
சில போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வீடு தாய் வீடாகவும், சில பேருக்கு அது பேய் வீடாகவும் இருப்பது சகஜம் தான். ஷிவானி நாராயணனுக்கு பிக் பாஸ் வீடு பேய் வீடாகவே இருந்ததாக தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். மேலும், அதே போன்ற எஃபெக்ட்களையும் போட்டு அதிர வைத்துள்ளார்.

தெரியாத நபர்கள்
பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் தெரியாத நபர்களுடன் இருக்கப் போவதை நினைத்து ரொம்பவே பயந்ததாக லைட்களை எல்லாம் மினுமினுக்க வைத்து ஒரு ஹாரர் எஃபெக்ட்டில் ஷிவானி சொல்லும் போதே, வேற எதுக்காகவோ இந்த வீடியோவை போட்டுள்ளார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.
லைவ் டெலிகாஸ்ட் விளம்பரம்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள புதிய வெப்சீரிஸ் ஆன லைவ் டெலிகாஸ்ட் வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. அதை விளம்பரப்படுத்தும் விதமாகவே ஷிவானி நாராயணன் இப்படியொரு டெரர் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை லைவ் டெலிகாஸ்ட்டை பார்க்க சொல்லுகிறார்.
ரியோ ராஜும்
ஷிவானி நாராயணன் மட்டுமின்றி ரியோ ராஜும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் கரண்ட் இல்லைன்னு சொல்லி, மெழுகுவர்த்தியுடன் பிக் பாஸ் ரசிகர்களுடன் பேசுவது போல லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் விளம்பரம் செய்துள்ளதையும் கண்டு ரசியுங்கள். இயக்குநர் வெங்கட் பிரபுவின் முதல் ஸ்க்ரிப்ட் தான் இந்த லைவ் டெலிகாஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











