ரம்யா என்னை கழட்டி விட்டுட்டா.. பாலா உன்னை கழட்டி விட்டுட்டான்.. ரெண்டு பேரும் ஜோடியா ஆகிடுவோமா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் எபிசோடில், தீபாவளிக்கு அப்புறமும் விளம்பர டாஸ்க்குகள் வரிசைக் கட்டி வர ஆரம்பித்துள்ளன.

யமஹா ஃபேசினோ வண்டியை பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து விளம்பரப்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு ஜோடியாக யமஹா ஃபேசினோ பைக்கை வைத்து ஒரு கான்சப்ட் செய்து அசத்தினர். அதில், முதல் ஜோடியாக சோமசேகரும் ஷிவானியும் ஜோடியானது ரசிகர்களை பயங்கர குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷிவானிக்கு கல்தா

ஷிவானிக்கு கல்தா

பாலாஜி முருகதாஸை சனம் ஷெட்டி, கேபி, சுச்சி என ஏகப்பட்ட பெண்கள், ஆன்ட்டிகள் சுற்றி வந்த நிலையில், ஷிவானியை மட்டும் செலக்ட் பண்ணி தனியா லவ் டிராக் ஓடியது. ஆனால், இப்போ அதற்கும் பாலாஜி வேட்டு வைத்து, நான் உன்னை லவ் பண்ணல, லவ் வந்தா சொல்றேன், அப்போ வா என நாய்க்குட்டியை விரட்டுவது போல விரட்டி கல்தா கொடுத்து விட்டார்.

ஓம் என்று சொன்னதும்

ஓம் என்று சொன்னதும்

சோமசேகரை எல்லாரும் சோம் என்று சொல்லி வந்தனர். திடீரென ரம்யா பாண்டியன் ஓம் என்று சொன்னதும், பிக் பாஸ் டாஸ்க்குக்காக ஜோடி சேர்த்து விட்டதும், சோமசேகர் ரம்யாவை எப்படியாவது கரெக்ட் பண்ணி செட்டில் ஆகி விடலாம் என கணக்கு போட்டார். ஆனால், அதை கரெக்ட்டா தெரிந்து கொண்ட ரம்யா, ஓமுக்கு ஓவர் போட்டு முடித்து விட்டார்.

வேற ஜோடி

வேற ஜோடி

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வண்டி வாங்கலையோ வண்டி டாஸ்க்கில் யமஹா ஃபேசினோவை ஜோடியாக இருந்து விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, ஷிவானிக்கு பாலா ஜோடியில்லை என்பதாலும், சோமுக்கு ரம்யா ஜோடியில்லை என்பதாலும், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து புது ஜோடியாகி வண்டியை விற்க ஆரம்பித்து விட்டனர்.

அதுக்காக புடிச்சது

அதுக்காக புடிச்சது

பார்க்கில் உட்கார்ந்து இருந்த ஷிவானியை, பைக் ஓட்டிக் கிட்டு போய் சோமசேகர் பிக்கப் பண்ணது நல்லாவே இருந்தது. மேலும், வண்டி ஓட்டும் போது, ஸ்டாண்ட் எடுக்க மறந்து விடக் கூடாது என்று சோம் சொன்னதால், சோம் லவ்வுக்கு ஷிவானி ஓகே சொல்லிவிட்டு, உயிர் முக்கியம் என சொன்னது சூப்பர்.

வாயை பிளந்த பாலா

வாயை பிளந்த பாலா

ஷிவானி நம்மள விட்டுட்டு பாலா கூட ரொமான்ஸ் பண்றாலே என பொறாமையில் பாலா வாயை பிளந்து பார்த்து கொடுத்த ரியாக்‌ஷன் எல்லாம் வேற லெவல். ஆனால், சோமுக்காக ரம்யா பாண்டியன் ஒரு நொடி கூட எந்த ஒரு ஃபீலிங்கும் பண்ணாமல் எஸ்கேப் ஆகிட்டோம் டா சாமி என உட்கார்ந்திருந்தார்.

பாலாவுக்கு பாட்டி தான்

பாலாவுக்கு பாட்டி தான்

பாலாவை சுசித்ரா விட மாட்டார் போல தெரிகிறது. ஆன்ட்டி சனம் ஷெட்டியா இருந்தா கூட பரவாயில்லை. பாட்டி சுசித்ராவை ரொமான்ஸ் பண்றதுக்காக செல்லம் ஷிவானியை விட்டுட்டியே பாலா என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செம ட்ரொல் செய்து வருகின்றனர். நல்ல வேளை பைக் டாஸ்க்கில் சம்யுக்தாவை ஜோடியாக்கிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X