ருத்ர தாண்டவம் ஆடுவாரா ஷிவானி.. வாங்குற அடியெல்லாம்.. திருப்பி கொடுக்கும் போது தெரியும் பாருங்க!

சென்னை: ஷிவானி நாராயணன் மற்றும் ஜித்தன் ரமேஷை ஜெயிலில் புடிச்சு போட்ட புரமோவை பார்த்து ஷிவானி ஆர்மியினர் ரொம்பவே பொங்கி உள்ளனர்.

இதுவரை சைலன்ட்டா இருந்தாலும், டாஸ்க் என்று வந்துட்டா இறங்கி சிக்ஸர் அடித்து வரும் ஷிவானியை, பயத்தின் காரணமாகவே மற்ற போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நிச்சயம் இதற்கெல்லாம் சீக்கிரமே ஷிவானி பதிலடி கொடுப்பார் என்றும் ரசிகர்கள் கமெண்ட்செய்துள்ளனர்.

முதல் புரமோ

முதல் புரமோ

இன்றைய முதல் புரமோவில் ஷிவானி நாராயணன் மற்றும் ஜித்தன் ரமேஷை பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் சுவாரஸ்யம் இல்லாதவர்கள் என டார்கெட் பண்ணி கண்ணாடி சிறைக்குள் அடைக்கும் காட்சிகள் இடம்பெற்றன. அதனை பார்த்த ஷிவானி நாராயணன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஷிவானி ஓகே

இவர் ஜித்தன் ரமேஷ் ஆர்மி போல, ஷிவானியை ஜெயிலில் போட்டது ஓகே ஜித்தன் ரமேஷை எதுக்காக ஜெயில் போடணும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். வேற யாருமே இந்த வீட்டுல சும்மா மிக்சர் சாப்பிட்டுக்கிட்டு இல்லையா? நேற்றைய எபிசோடில் கூட ஜித்தன் ரமேஷ் ஆஜீத்தின் ஃப்ரீ பாஸை எல்லாம் புடுங்கி நிஷாவை அழவிட்டாரே என ரமேஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தினமும் மிக்சர் தான்

அங்க வேல்முருகன் தினமும் மிக்சர் தான் சாப்பிடுறாரு, நியாயமா பார்த்தா அவரைத் தான் அந்த ஜெயிலில் புடிச்சு போடணும். ஏன் அவரை யாருமே சொல்லல என இந்த பிக் பாஸ் ரசிகர், ரொம்பவே கொதித்துப் போய் பொங்கியுள்ளார். மேலும், சிலரும் வேல்முருகனை உள்ள போட்டுருக்கலாம் என கமெண்ட் அடித்துள்ளனர்.

ரியோக்கு டவுட்டு வந்துருக்கும்

அர்ச்சனா என்ட்ரியான பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பட்டம் கொடுத்தார். அப்போது, ரியோவுக்கு சவாலான போட்டியாளர் என்கிற பட்டத்தை கொடுத்ததும், அதை பார்த்த அவருக்கே டவுட்டு வந்துருக்கும். விஜய் டிவி நல்லா உங்க வீட்டுப் பிள்ளைக்கு சப்போர்ட் பண்றீங்க என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அந்த நாலு பேர் தான் போல

"போறபோக்கை பார்த்தால் ரியோ, அர்ச்சனா, ரம்யா, நிஷா, இந்த நாலு பேர்ல ஒருத்தருக்குதான் கப்பு கிடைக்கும் போல" இது குரூபிஸத்தோட மோசமான சேனல் நெப்போடிசமா இருக்கே என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவி மீதே தொடர்ந்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர். இதுவரை ரியோ சிறப்பாக ஆடவில்லை என்பதே ரசிகர்களின் கருத்து.

ஏன் டா ஏன்

இந்த ஷிவானி நாராயணன் ஆர்மி ஜித்தன் ரமேஷை உள்ள போட்டது கூட பரவாயில்லை. ஷிவானி செல்லத்தை ஏன் ஜெயில்ல புடிச்சு போட்டீங்க, அவ டாஸ்க் சமயத்துல நல்லா தானே பெர்ஃபார்ம் பண்றா என்றும், இந்த ஒண்ணுத்துக்கும் விளங்காத சோமசேகர் எல்லாம் உங்க கண்ணுல படவே இல்லையா என்றும் விளாசி உள்ளார்.

சிவாஜி.. ஷிவானி

வளைச்சு வளைச்சு குத்துறானுகளே வலிக்கலையா ஷிவானி என சிவாஜி பட சீனை போட்டு க்ரியேட் பண்ணப் பட்டுள்ள மீம், செம வைரலாகி வருகிறது. திருப்பி கொடுப்பேன்ல பார்த்துகிட்டே இரு என ஷிவானியின் லுக்கை செமையா மேட்ச் பண்ணியிருக்காங்க, சீக்கிரமே ஷிவானி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X