ப்பா.. எவ்ளோ அழகு.. ஆயுத பூஜையை அமர்க்களப்படுத்திய ஷிவானி நாராயணன்.. பூசணிக்காய் சுத்திப்போடுங்க!
சென்னை: பம்பர் பட நடிகை ஷிவானி நாராயணன் ஆயுத பூஜையை முன்னிட்டு சுடிதார் அணிந்து கொண்டு சாமி ரூமில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.
விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருந்தனர்.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் தனது வசீகரத்தால் ஏகப்பட்ட இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

ஷிவானி வீட்டில் ஆயுத பூஜை: தசரா விடுமுறை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகை ஷிவானி நாராயணன் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை வீட்டில் கொண்டாடி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பேரழகி ஷிவானி: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஷிவானி நாராயணன் வரிசையாக பல படங்களில் நடித்து வந்த நிலையில், கடைசியாக பம்பர் படத்தில் ஹீரோயினாக கலக்கி இருந்தார். விரைவில் தனது அடுத்த படத்தை அறிவிக்கவுள்ள ஷிவானி நாராயணன் சந்தன நிற கோடு போட்ட சுடிதாரில் அழகு பொங்க பேரழகியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குவியுது லைக்ஸ்: ஷிவானி ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்து போட்டோக்களை வெளியிட்ட நிலையில், அவருக்கு வாழ்த்துக்களும் லைக்குகளும் சும்மா குவிந்து வருகிறது. 3.9 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஷிவானி நாராயணன் விரைவில் 4 மில்லியன் ரசிகர்களை எட்டிப் பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நைட்டி விளம்பரம்: சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்து வரும் ஷிவானி நாராயணன் நைட்டி விளம்பரத்திலும் தலை காட்ட ஆரம்பித்துள்ளார். வித விதமான நைட்டியை அணிந்து கொண்டு அந்த விளம்பரத்தில் கவர்ச்சி பொங்க நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஷிவானி நாராயணன்.


Click it and Unblock the Notifications











